4ஆவது முறையாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
ஒலிம்பியாஸ்டேடியன் பெர்லினில் நடந்த UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. கோலே இல்லாமல் முதல் பாதி முடிந்த நிலையில், நிகோ வில்லியம்ஸ், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் கோல் அடித்தார். அதோடு ஸ்பெயின் வெற்றி பெற்றுவிடும் நினைத்த நிலையில், இங்கிலாந்து வீரர் கோல் பால்மர் ஒரு கோல் அடித்து கோல்கணக்கை 1-1 என்ற நிலைக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் கோல் அடித்து வெற்றி பெற்றார்.
2024 யூரோ கோப்பையின் முக்கிய தருணங்கள்
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஸ்பெயின், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி பந்து மீது ஆதிக்கம் செலுத்தியது. எனினும், ஸ்பெயினால் இங்கிலாந்தின் இலக்கை நெருங்க முடியவில்லை. ஜான் ஸ்டோன்ஸ் நன்றாக கோலை பாதுகாத்து, ஆரம்பத்தில் வில்லியம்ஸின் கிராஸை நன்றாக சமாளித்தார். இங்கிலாந்தும் சிறப்பாக விளையாடியது. ஆனால், இறுதி மூன்றில் முடிவெடுப்பதில் அவர்கள் நேர்த்தியைக் காட்டவில்லை. லூக் ஷா தனது இருப்பை உணர்த்தும் வகையில் சில நம்பிக்கைக்குரிய தருணங்களை பதிவு செய்தார். சுவிட்சர்லாந்தின் ஸ்டீவன் ஜூபர் (யூரோ 2020), வேல்ஸின் ஆரோன் ராம்சே (யூரோ 2016), பெல்ஜியத்தின் ஈடன் ஹசார்ட் (யூரோ 2016) மற்றும் செர்பியாவின் லுபிகா ராடுலோவிச் (யூரோ 2000) ஆகியோர் ஒரே பதிப்பில் நான்கு அஸ்சிஸ்ட்களை எட்டியவர்கள் ஆவர்.