LOADING...
INDvsENG 4வது டெஸ்ட்: கடைசி நாளில் காயமடைந்த ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா?
கடைசி நாளில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வார் என தகவல்

INDvsENG 4வது டெஸ்ட்: கடைசி நாளில் காயமடைந்த ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2025
10:02 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது நாளில் இந்தியாவின் காயமடைந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வார் என்று பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் உறுதிப்படுத்தினார். முன்னதாக, போட்டியின் தொடக்க நாளில் வலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ரிஷப் பண்ட், இரண்டாம் நாளில் அரைசதம் அடித்து மீள்தன்மையை வெளிப்படுத்தினார். எனினும், பந்துவீச்சின்போது ஓய்வெடுத்த அவர், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பேட்டிங்கில் பங்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நான்காம் நாள் ஆட்ட முடிவில், இந்தியா இரண்டு விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, இன்னும் 137 ரன்கள் பின்தங்கியுள்ளது.

டிரா

போட்டி டிராவில் முடியுமா? 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் டக்கவுட் ஆன நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் மற்றும் ஷுப்மான் கில் இடையேயான வலுவான 174 ரன்கள் கூட்டணியால் இன்னிங்ஸ் நிலைபெற்றது. இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 137 ரன்கள் பின்தங்கியுள்ளதால் விக்கெட்டுகளை இழக்காமல் தக்கவைத்தால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும் என இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது. மேலும், ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணி தொடரில் 1-2 என பின்தங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் தோற்றால் தொடரையும் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.