
இதே நாளில் அன்று : 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்! கீரன் பொல்லார்டின் அசுர தாண்டவம்!
செய்தி முன்னோட்டம்
டி20 போட்டிகளில் பவார் ஹிட்டராக கோலோச்சிய கீரன் பொல்லார்ட் மார்ச் 4, 2021 அன்று, ஆன்டிகுவாவில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடக்க டி20 இல் வரலாறு படைத்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் (நெதர்லாந்திற்கு எதிரான 2007 ஒருநாள் உலகக் கோப்பை) மற்றும் இந்தியாவின் யுவராஜ் சிங் (இங்கிலாந்துக்கு எதிராக 2007 டி20 உலகக் கோப்பை) ஆகியோருக்கு பிறகு சர்வதேச அளவில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை இதே நாளில் பொல்லார்ட் பெற்றார்.
இலங்கையின் அகில தனஞ்சய தனது முந்தைய ஓவரில் தான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்த நிலையில், அடுத்த ஓவரை வீசியபோது 6 பந்துகளும் சிக்சருக்கு பறந்து மோசமான சாதனையை படைத்தார்.
கீரன் பொல்லார்ட்
இலங்கை vs மேற்கிந்திய தீவுகள் 2021 போட்டியின் முழு விபரம்
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், அகிலவின் ஹாட்ரிக் மூலம் நான்காவது ஓவரில் 3 விக்கெட்டுக்கு 52 ரன்கள் என தடுமாறியது.
அடுத்த ஓவரில் மேற்கிந்திய தீவுகள் மற்றொரு விக்கெட்டை இழந்து 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் அகில மீண்டும் பந்துவீச வர, பேட்டிங் முனையில் இருந்த பொல்லார்ட் 6 பந்தையும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றார்.
இதன் மூலம் 13.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.