
இதே நாளில் அன்று : உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய தினம்
செய்தி முன்னோட்டம்
1877 ஆம் ஆண்டு இதே நாளில் தான் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே மெல்போர்னில் இந்த போட்டி நடந்தது.
இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தொடர் சமநிலையில் முடிந்தது.
அந்த நேரத்தில், கிரிக்கெட்டின் விதிகள் வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக ஒரு ஓவருக்கு நான்கு பந்துகள் மட்டுமே வீசப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் சார்லஸ் பேனர்மென் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் சதத்தை இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பதிவு செய்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ஐசிசி ட்வீட்
#OnThisDay in 1877, Test cricket began. Nobody knew it at the time - the match was awarded Test status only later - as James Lillywhite (jnr) led an England side against a 'Combined New South Wales and Victoria XI' in Melbourne.
— ICC (@ICC) March 15, 2018
Australia won the match by 45 runs. pic.twitter.com/GuCTirvjy2