மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கு மூத்த ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான முகமது நபியை திரும்ப அழைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) உறுதிப்படுத்தியது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நபி, கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான தொடரிலிருந்தும் விலகினார். அவருக்கு தற்போது 38 வயது ஆவதால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட்டதாக சந்தேகம் கிளம்பியது. ஆனால், தற்போது திடீரென ஷார்ஜாவில் மார்ச் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு அணியில் மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.