Page Loader
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 12, 2023
11:09 am

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை 200வது முறையாக எம்எஸ் தோனி புதன்கிழமை (ஏப்ரல் 12) நடக்க உள்ள போட்டியில் வழிநடத்துகிறார். அவரது தலைமையில் சிஎஸ்கே புதன்கிழமை சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. 2008 இல் ஐபிஎல் தொடக்க சீசன் முதற்கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி, இதுவரை 199 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 120 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், 78 இல் தோல்வியடைந்தார் மற்றும் ஒரு ஆட்டத்தில் எந்த முடிவும் இல்லை.

Under dhoni leadership csk won title four times

சிஎஸ்கே அணிக்காக நான்கு கோப்பைகளை பெற்றுக் கொடுத்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனியின் ஒட்டுமொத்த வெற்றி சதவீதம் 60.30 ஆக உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை தோனியின் சிறந்த சீசன் 2018 ஆகும். அதில் அவர் 150.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 455 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் சிஎஸ்கே கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக மும்பை இந்தியன் 5 முறை கோப்பை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்து தோனி தலைமையில் சிஎஸ்கே 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே ஐபிஎல்லில் மொத்தமாக தோனி 213 போட்டிகளில் கேப்டனாக தலைமை தாங்கியுள்ளார். இதில் 14 போட்டிகள் 2016 இல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக கேப்டனாக செயல்பட்டதும் அடங்கும்.