Loading...
விராட் கோலியின் 10 ஆண்டு சாதனையை உடைத்த மேட் ரென்ஷா: டர்பன் டெஸ்டில் 190 ரன்கள் விளாசல்
விராட் கோலியின் 10 ஆண்டு சாதனையை மேட் ரென்ஷா முறியடித்துள்ளார்.

விராட் கோலியின் 10 ஆண்டு சாதனையை உடைத்த மேட் ரென்ஷா: டர்பன் டெஸ்டில் 190 ரன்கள் விளாசல்

எழுதியவர் Vasuki
Oct 11, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேட் ரென்ஷா அபாரமாக விளையாடி 190 ரன்கள் குவித்தார். களத்தில் நிலைத்து நின்று 397 பந்துகளை எதிர்கொண்ட அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்வரிசை வீரர்களுடன் அதிக ரன்கள் சேர்த்த பேட்டர் என்ற விராட் கோலியின் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராகக் கடைசி வரிசை பேட்டர்களுடன் இணைந்து கோலி 171 ரன்கள் திரட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது டர்பனில் பின்வரிசை வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்துத் தனது பேட்டிங் மூலம் மட்டுமே 174 ரன்கள் குவித்த ரென்ஷா, புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

டர்பன் மைதானம்

சரிவிலிருந்து மீட்ட அசுரக் கூட்டணிகள்

ஆஸ்திரேலியா 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது தனித்து நின்று போராடிய மேட் ரென்ஷா, பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயனுடன் பலமான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை 390 ரன்களுக்கு உயர்த்தினார்.

இதில் லயனுடன் 134 ரன்கள் கூட்டணி அமைத்த ரென்ஷா, 190 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை நூலிழையில் தவறவிட்டார்.

இவ்வாரான ஆட்டத்தின் மூலம் டர்பனில் பிலிப் ஹியூஸின் 160 ரன்கள் மற்றும் குசல் பெரேராவின் 153 ரன்கள் சாதனைகளை முறியடித்து புதிய சரித்திரம் படைத்தார்.

இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது

ADVERTISEMENT