
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஜிடி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிற்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயம்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) லக்னோ மைதானத்தில் நடந்து வரும் 26வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பந்துவீசுவதாகஅறிவித்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 120 ரன்கள் எடுத்தது.
13வது ஓவரில் 60 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் அவுட்டானதால், இந்த ஜோடி பிரிந்தது.
சாய் சுதர்சன்
சாய் சுதர்சன் அரைசதம்
கில் வெளியேறிய நிலையில், 56 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சனும் அடுத்த ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்ததால், கடைசி 8 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் சுமார் 60 ரன்களை மட்டுமே எடுத்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 181 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி பேட்டிங்கைத் தொடங்க உள்ளது.