பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து ராஜ் பாவா விலகல்! குர்னூர் பிரார் மாற்று வீரராக ஒப்பந்தம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சீசனின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக, இந்திய ஆல்-ரவுண்டர் ராஜ் பாவா ஐபிஎல் 2023 இல் இருந்து வெளியேற்றப்பட்டதால், பஞ்சாப் கிங்ஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாவா இடது தோள்பட்டை காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். இதையடுத்து பாவாவுக்கு பதிலாக குர்னூர் பிரார் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 22 வயதான குர்னூர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். அவர் 2022-23 ரஞ்சி டிராபி சீசனில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி ஐந்து முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் குர்னூர் 107 ரன்கள் எடுத்துள்ளதோடு, 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுளார். மேலும், பஞ்சாப் அணிக்காக ஒரு லிஸ்ட் ஏ கேம் விளையாடி, அதில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.