"நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் தொடக்க விழா மார்ச் 31 அன்று (வெள்ளிக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. 2018க்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மிக பிரமாண்டமான முறையில் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. 2019இல் புல்வாமா தாக்குதலுக்கு நிதி வழங்குவதற்காக தொடக்க விழா தொகையை கொடுத்ததால் அந்த ஆண்டு நிகழ்ச்சி நடக்கவில்லை. மேலும் 2020 முதல் 2022 வரை கொரோனா காரணமாக தொடக்க விழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பழைய கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.