
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள ஐபிஎல் 2023 இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையை செவ்வாய்க்கிழமை (மே 23) மதியம் பிசிசிஐ தொடங்கியது.
பிசிசிஐ ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு பிரத்யேகமாக முன்கூட்டியே விற்பனையை தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து மக்களுக்கும் டிக்கெட் கிடைக்கிறது.
ஐபிஎல் 2023 இறுதி டிக்கெட்டுகள் பேடிஎம் நிறுவனத்தின் இன்சைடர் தளத்தில் கிடைக்கும். நீங்கள் இங்கிருந்து டிக்கெட்டுகளை வாங்கலாம்.
பெரும்பாலான மேல்நிலை ஸ்டாண்டுகளில் ₹1,000 மதிப்புள்ள டிக்கெட் விற்பனைக்கு உள்ள நிலையில், மைதானத்திற்கு நெருக்கமாக உள்ள ஸ்டாண்டுகளில் விலை ₹2,500 முதல் ₹6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில பெவிலியன் இருக்கைகள் மற்றும் விஐபி ஸ்டாண்டுகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் கிடைக்கவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The tickets for the ultimate clash are now LIVE!
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
Witness the battle of the best and experience history in the making 🏆
Mark your presence in #TATAIPL Final 2023 🙌
BUY HERE 🔽 #Final https://t.co/2jYjgxJ0Ry pic.twitter.com/IfibpcFdE0