Page Loader
சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்

சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்!

எழுதியவர் Sekar Chinnappan
May 16, 2023
12:06 pm

செய்தி முன்னோட்டம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2023 இல் ஆரம்பத்தின் சில போட்டிகளை தவிர தொடர்ச்சியான காயங்கள் காரணமாக விளையாடாமல் உள்ளார். அவர் இல்லாவிட்டாலும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஒரு சரியான கலவையுடன் அணியை கட்டமைத்துள்ளது. ஐபிஎல் தொடர் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அவரை அணிக்குள் கொண்டு வந்து ஏற்கனவே உள்ள வலுவான கட்டமைப்பில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் அவரை ஒரு 'பேட்டிங் கவர்' என்று குறிப்பிட்டதால், அவர் முன்னணி வீரராக இந்த தொடரில் களமிறக்கப்பட வாய்ப்பே இல்லை எனத் தெரிகிறது.

ben stokes will return to england before ipl playoff

பிளேஆப் சுற்றுக்கு முன்பே நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை எனும் சூழலால், ஐபிஎல் 2023 பிளேஆப் சுற்றுக்கு முன்னதாகவே இங்கிலாந்து திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜூன் 16 ஆம் தேதி ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறார். இதனால் ஆஷஸ் தொடருக்கு முன்னதாக அவர் முழு தகுதியுடன் இருப்பது அவசியம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. மேலும் ஆஷஸ் தொடருக்கு முன்னதாக அயர்லாந்துடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனும் காயத்தில் அவதிப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.