
ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
செய்தி முன்னோட்டம்
மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.
டெல்லி அணியின் வழக்கமான கேப்டன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வில் இருப்பதால், அவருக்கு பதிலாக வார்னர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வார்னர் 2021 ஐபிஎல் சீசனின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்தார். ஆனால் மிக மோசமான செயல்திறனால் தொடரின் இடையிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
எனினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016 இல் ஐபிஎல் பட்டத்தை வென்றபோது அணியை வழிநடத்தியது டேவிட் வார்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..
ட்விட்டர் அஞ்சல்
டேவிட் வார்னர் நியமனம்
David Warner to lead Delhi Capitals in IPL 2023 🧢 #IPL2023 #DelhiCapitals pic.twitter.com/RCrYzOyssP
— Doordarshan Sports (@ddsportschannel) February 23, 2023