LOADING...
டி20 உலககோப்பை தொடர்களில் 300 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய வீரர்கள்
சஞ்சு சாம்சன்

டி20 உலககோப்பை தொடர்களில் 300 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய வீரர்கள்

எழுதியவர் Prasanna
Mar 09, 2026
01:51 pm

செய்தி முன்னோட்டம்

2026 கிரிக்கெட் டி20 உலககோப்பையை வென்று அசத்தியிருக்கிறது இந்தியா. ஒரே டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனைைப் படைத்திருக்கிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்களில் ஒரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

#1

சஞ்சு சாம்சன்

மேலே கூறியது போல முதலிடத்தில் சஞ்சு சாம்சன் இருக்கிறது. நேற்று நடைபெற்று முடிந்த 2026 உலக கோப்பை தொடரில் 321 ரன்களைக் குவித்துள்ளார் அவர். மேலும் வெறும் 5 போட்டிகளில் இதனை செய்திருக்கிறார் சஞ்சு சாம்சன். நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்திருப்பதால் இந்திய அணியில் அவருக்கான இடம் தற்போது உறுதியாகியிருக்கிறது. இந்தத் தொடரில் பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருதையும் அவரே தட்டிச் சென்றுள்ளார்.

#2

விராட் கோலி

இந்த உலககோப்பை தொடருக்கு முன்பு வரை 319 ரன்களுடன் ஒரே டி20 தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரராக விராட் கோலியே முதலிடத்தில் இருந்தார். 2014ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை விராட் கோலி குவித்திருந்தார். 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 319 ரன்களை கோலி குவித்திருந்தார். அரையிறுதியிலும், இறுதிலும் சேர்த்து நான்கு அரைசதங்களையும் அடித்திருந்தார். அந்த முறை இந்தியா கோப்பை வெல்லவில்லை என்றாலும், பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருதை விராட் கோலியே பெற்றார்.

Advertisement

#3

இஷான் கிஷன்

இந்தத் தொடரில் பல்வேறு போட்டிகளில் இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட இஷான் கிஷனும் முக்கிய காரணம். 2026 உலக கோப்பை தொடரில் 317 ரன்களைக் குவித்துள்ளார் கிஷன். 193.29 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி, இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்து வந்தார். இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 54 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement