Loading...
2026 ஆசிய விளையாட்டு நிறைவு: 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம்
ஒரே ஆசிய விளையாட்டில் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2026 ஆசிய விளையாட்டு நிறைவு: 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம்

எழுதியவர் Vasuki
Oct 03, 2026
09:42 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் பதக்க வேட்டை ஆடவர் ஹாக்கி அணியின் தங்கப் பதக்கத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 21-வது தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடைசி நான்கு நாட்களில் வில்வித்தையில் 5 தங்கம், குத்துச்சண்டையில் 3 தங்கம், மல்யுத்தம் மற்றும் ஹாக்கியில் தலா 2 தங்கம், ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம் என இந்திய வீரர்கள் பதக்கங்களை அள்ளினர்.

ஒப்பீடு

2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டு

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையுடன் 4-வது இடத்தைப் பிடித்திருந்தது.

அந்தப் போட்டியுடன் ஒப்பிடுகையில், நடப்பு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 21 பதக்கங்கள் குறைந்து 85 ஆகப் பதிவாகியுள்ளது.

இருப்பினும், போட்டியின் கடைசி நாளில் உஸ்பெகிஸ்தான் தங்கம் வெல்லாத பட்சத்தில், இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டில் 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது உறுதியாகியுள்ளது.

2028 ஒலிம்பிக்கிற்கு தகுதி

வரலாறு படைத்த இந்திய ஹாக்கி

மலேசியாவுக்கு எதிரான ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கின் 2 கோல்கள் மற்றும் ஜுக்ராஜ், ஹர்திக், ஷிலானந்த் ஆகியோரின் கோல்களால் இந்திய அணி தங்கம் வென்றது.

இத்தொடரில் 12 கோல்கள் அடித்த ஹர்மன்பிரீத், அடுத்தடுத்து 2 ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய கேப்டனானார்.

முன்னதாக மகளிர் அணியும் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வென்றிருந்த நிலையில், ஒரே தொடரில் இரு அணிகளும் தங்கம் வென்று 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளன.

ADVERTISEMENT