LOADING...
ஒரு பிடி புல்லின் விலை ரூ.43,000! உலகக்கோப்பை இறுதிப்போட்டி புல்வெளியை விற்கும் ஃபிஃபா
உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி மைதானப் புல்லை விற்பனைக்கு கொண்டுவந்தது ஃபிஃபா

ஒரு பிடி புல்லின் விலை ரூ.43,000! உலகக்கோப்பை இறுதிப்போட்டி புல்வெளியை விற்கும் ஃபிஃபா

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
09:51 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவிருக்கும் மைதானத்தின் புல்வெளியை வணிக ரீதியாக விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் ஸ்டேடியத்தில் இந்த இறுதிப்போட்டி நடத்தப்படவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் போட்டிக்காகப் பயன்படுத்தப்படும் இயற்கை புல்வெளியின் தனித்தனித் துண்டுகளை சேகரிப்பாளர்களுக்காக ஃபிஃபா தற்பொழுது விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

விலை மற்றும் விபரங்கள்

ஒரு துண்டு புல்லின் அதிர்ச்சியூட்டும் விலை மற்றும் விபரங்கள்

ஃபிஃபாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளத்தில், இந்த இறுதிப்போட்டி மைதானப் புல்லின் ஒரு சிறிய துண்டு 450 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹42,989) என்ற பிரம்மாண்ட விலைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புல் துண்டுகள் ஒவ்வொன்றும் 17.5க்கு 17.5 என்ற அளவில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது மில்லிமீட்டரா, இன்சா அல்லது சென்டிமீட்டரா என்ற துல்லியமான அளவீட்டு விபரத்தை ஃபிஃபா அதில் தெளிவுபடுத்தவில்லை. ஏற்கனவே உலகக்கோப்பை டிக்கெட் விலை மிக அதிகமாக இருக்கும் சூழலில், இந்த புல் விற்பனை நுகர்வோர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பம்சங்கள்

ஆடம்பரப் பெட்டியில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்?

இந்த ₹42,989 மதிப்புள்ள பிரீமியம் பாக்ஸில், ஜூலை 19 அன்று நடக்கும் இறுதிப்போட்டி மைதானத்தின் புல் துண்டு ஒரு உயர்தர அக்ரிலிக் பெட்டிக்குள் நிரந்தரமாகப் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இத்துடன், இந்தத் தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் படம் அடங்கிய ஒரு நேர்த்தியான யுஎஸ்பி நினைவுப் பரிசும் இந்த சொகுசுப் பெட்டியினுள் வழங்கப்படும். எனினும், இந்த ஆர்டர்கள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் என்றும், போட்டி முடிவடைந்த பிறகே ஷிப்மென்ட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புல்வெளி

மைதானப் புல்வெளி குறித்தான புதிய சர்ச்சை

ஃபிஃபாவின் இந்த விற்பனை முடிவு பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. வழக்கமாக மெட்லைஃப் ஸ்டேடியத்தில் செயற்கை புல்வெளி மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், இந்த கால்பந்து உலகக்கோப்பைக்காக ஃபிஃபா தற்காலிகமாக இயற்கை புற்களை அமைத்துள்ளது. இந்த தற்காலிகப் புல்வெளியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதகாவும், பந்து உருளும் வேகம் சீராக இல்லை என்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களும் மேலாளர்களும் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், அதே புல்லை ஃபிஃபா இவ்வளவு பெரிய விலைக்கு விற்பது ரசிகர்களைக் கடுப்பேற்றியுள்ளது.

Advertisement