Page Loader
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடித்த தினேஷ் சண்டிமால்
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடித்த தினேஷ் சண்டிமால்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடித்த தினேஷ் சண்டிமால்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 20, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் மூத்த வீரர் தினேஷ் சண்டிமால் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததோடு, இலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜுன் ரணதுங்காவின் சாதனையை முறியடித்தார். தினேஷ் சண்டிமால் 92 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 25வது அரைசதமாகும். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 580 ரன்களில் டிக்ளேர் செய்த பிறகு, இலங்கை அணி 164 ரன்களில் சுருண்டு பாலோ ஆன் ஆகி மீண்டும் பேட் செய்தது. இதில் 4 வீரர்கள் அரைசதம் அடித்த நிலையிலும், 358 ரன்களில் ஆல் அவுட் ஆனதால், நியூசிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

தினேஷ் சண்டிமால்

தினேஷ் சண்டிமால் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்

டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் 10வது அதிக ரன்களை எடுத்தவர் என்ற சிறப்பை கொண்டுள்ள சண்டிமால் இப்போது 72 ஆட்டங்களில் 43.35 சராசரியுடன் 5,116 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 13 சதங்கள் மற்றும் 25 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் ரன்களின் அடிப்படையில் அவர் தனது சகநாட்டவரான அர்ஜுன ரணதுங்காவை (5,105) நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் எடுத்த 62 ரன்கள் மூலம் பின்னுக்குத் தள்ளியுள்ளார். தற்போது விளையாடி வருபவர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் (7,118) மற்றும் திமுத் கருணாரத்னே (6,230) மட்டுமே சண்டிமாலை விட அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த இலங்கை வீரர்களாக உள்ளனர்.