LOADING...
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் பிரட் லீ சேர்ப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் பிரட் லீ சேர்ப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் பிரட் லீ சேர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
06:58 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிக உயரிய கௌரவமான ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) இணைக்கப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு அவர் ஆற்றிய அசாத்தியமான பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரட் லீ தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று வடிவப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 322 போட்டிகளில் விளையாடி 718 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 380 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், கிளென் மெக்ராத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் மிகவும் வெற்றிகரமான ஒருநாள் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த கௌரவத்தைப் பெறும் 62வது வீரர் பிரட் லீ ஆவார்.

நெகிழ்ச்சி

பிரட் லீ நெகிழ்ச்சி

இந்த அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு பேசிய பிரட் லீ, தான் கைப்பற்றிய விக்கெட்டுகளை விட 160 கிமீ வேகத்தைத் தொட்டதே தனக்குப் பெருமை அளிப்பதாகக் கூறினார். "2003 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி மற்றும் தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகள் ஆகியவை ஒரு வீரராக உன்னதமான தருணங்கள். இருப்பினும், பந்தை 160 கிமீ வேகத்தில் வீசியது எனக்கு மிகவும் தனித்துவமானது." என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது வெற்றிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் டென்னிஸ் லில்லி அளித்த அறிவுரையே காரணம் என்று பிரட் லீ குறிப்பிட்டார். பிரட் லீயின் இந்தச் சாதனை அவரது ரசிகர்களுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Advertisement