LOADING...
"சம ஊதியத்திற்கு கிடைத்த பலன்": மகளிர் உலக கோப்பை வென்றதும் BCCI கூறியது இதுதான்!
மகளிர் அணிக்கு ஐசிசி-யை அறிவித்ததை விட கூடுதல் தொகை பரிசாக அறிவித்தது BCCI

"சம ஊதியத்திற்கு கிடைத்த பலன்": மகளிர் உலக கோப்பை வென்றதும் BCCI கூறியது இதுதான்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2025
08:59 am

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் ஐசிசி-யை விட அதிக ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நேற்று நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் உலகக் கோப்பையை முத்தமிட்டது. மகளிர் உலகக் கோப்பையை வென்ற 4வது அணியாக இந்தியா இப்போது உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதி போட்டியில் ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அரை சதங்கள் இந்தியாவை மொத்தம் 298/7 ரன்கள் என்ற இலக்கை எட்ட வைத்தன.

பரிசு

பிசிசிஐயின் பிரம்மாண்ட அறிவிப்பு

உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணிக்கு ரூ. 51 கோடி ரொக்கப் பரிசை பிசிசிஐ அறிவித்துள்ளது. வெற்றியாளர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வழங்கும் பரிசுத் தொகை சுமார் ரூ. 39.78 கோடி (4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். பிசிசிஐ அறிவித்துள்ள தொகை, ஐசிசி வழங்கும் தொகையை விட ரூ. 11 கோடிக்கும் மேல் அதிகமாகும். இந்த ரூ. 51 கோடி பரிசுத் தொகை, உலகக் கோப்பையை வென்ற வீராங்கனைகள், தேர்வுக் குழுவினர் மற்றும் அமோல் மஜும்தார் தலைமையிலான ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சம ஊதியம்

சம ஊதியத்தின் விளைவு

கடந்த 2022ஆம் ஆண்டு பிசிசிஐ எடுத்த சம ஊதியக் கொள்கை முடிவின் வெற்றியே இந்த உலக கோப்பை வெற்றி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சம ஊதியம் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) போட்டிகள் மூலம் கிடைத்த முதலீடும், அனுபவமும் வீராங்கனைகளின் திறமையை மேம்படுத்தியதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஐசிசி பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்ததில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.