LOADING...
உலகக் கோப்பைக்காக இந்தியா வரமாட்டோம்! ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்
டி20 உலகக் கோப்பை போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று BCB கோரிக்கை விடுத்துள்ளது

உலகக் கோப்பைக்காக இந்தியா வரமாட்டோம்! ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2026
07:52 am

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2026-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வரப்போவதில்லை எனப் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்(BCB) அதிரடியாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்துத் தங்களது போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று பங்களாதேஷ் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய பிசிபி துணைத் தலைவர் ஷகாவத் ஹொசைன், "நாங்கள் எடுத்த முடிவில் எள்ளளவும் மாற்றமில்லை. எக்காரணம் கொண்டும் இந்தியாவிற்குப் பயணம் செய்யப் போவதில்லை. மாற்று இடங்களை ஐசிசி ஆலோசித்து வருகிறது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு BCB-ஐ வலியுறுத்தும் ICC 

தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டதால், பங்களாதேஷ் வாரியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீரர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் எனக் கூறி பங்களாதேஷ் அதனை நிராகரித்துள்ளது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹ்மானை விடுவிக்கக் கோரி பிசிசிஐ (BCCI) உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பங்களாதேஷ் வாரியத்தின் இந்த முரண்பட்ட நிலைப்பாடு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிடிவாத போக்கால் 2026 உலகக் கோப்பை தொடரின் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஐசிசி இதற்கான மாற்றுத் தீர்வை தேடி வருகிறது.

Advertisement