ஆஸ்திரேலிய ஓபன் 2023 : ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்!
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) அன்று நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் 2023 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் நான்காம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
ஒன்பது முறை ஏடிபி டூர் டைட்டில் வென்றுள்ள சிட்சிபாஸ், ரஷ்ய வீரரான கரேன் கச்சனோவை நான்கு செட்களில் தோற்கடித்து தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பைனலை அடைந்தார்.
21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், அமெரிக்க வீரரான டாமி பாலை மூன்று செட்களில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய ஓபனில் தனது 10வது இறுதிப் போட்டியை எட்டினார்.
ஆஸ்திரேலிய ஓபன் 2023
ஜோகோவிச் vs சிட்சிபாஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
புள்ளிவிபரங்கள் அடிப்படையில் ஜோகோவிச் சிட்சிபாஸை விட அதிக முன்னிலை பெற்றுள்ளார்.
ஏடிபி டூரில் ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் இருவரும் நேருக்கு நேர் மோதியதில் 10-2 என ஜோகோவிச் முன்னிலை பெற்றுள்ளார். மேலும் கடைசியாக இருவரும் மோதிய ஒன்பது போட்டிகளிலும் ஜோகோவிச்சே வெற்றி பெற்றுள்ளார்.
2021 ரோலண்ட் கரோஸின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் சிட்சிபாஸை 6-7(6), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து பெற்ற வரலாற்று வெற்றியும் இதில் அடங்கும்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெறுபவர் திங்கள்கிழமை (ஜனவரி 30) ஏடிபி தரவரிசையில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை பின்னுக்குத் தள்ளி உலகின் முதலிடத்தைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.