அடுத்த செய்திக் கட்டுரை

கடைசி போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் தொப்பியை தொலைத்த டேவிட் வார்னர்
எழுதியவர்
Sekar Chinnappan
Jan 02, 2024
11:29 am
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொப்பியைக் கொண்டிருந்த அவரது பேக் காணாமல் போனதையடுத்து உணர்ச்சிவசமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
புதன்கிழமை (ஜனவரி 3) அன்று தொடங்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
இந்நிலையில், அந்த போட்டிக்கு முன்னதாக தனது முக்கியமான டெஸ்ட் தொப்பியை வைத்திருந்த பேக் காணாமல் போனதால் மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளார்.
மேலும், இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தொப்பி வைத்திருந்த பேக்கை மீட்க தனக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, டேவிட் வார்னர் விளையாடும் தனது கடைசி போட்டி அவரது சொந்த ஊரான சிட்னியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.