வங்கி கணக்கில் நாமினி செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?
வங்கி சேவையில் டெபாசிட் செய்கையில் முக்கிய நாமினி வைப்பது அவசியமான ஒன்று. நாமினி இருந்தால், வங்கிக் கணக்கு உரிமையாளர் இறந்து போனால், கணக்கில் உள்ள நிதியானது எந்தத் தொந்தரவும் அல்லது சட்டச் சிக்கல்களும் இல்லாமல் கணக்கில் உள்ள தொகையைப் பெற முடியும். ஒருவேளை நாமினி இல்லாத பட்சத்தில், சட்டப்பூர்வ வாரிசுகள் கணக்கில் உள்ள நிதியைப் பெறுவதற்கு நீண்ட, சிக்கலான சட்டப்பூர்வ செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எந்தவொரு சட்டரீதியான சிக்கல்களும் சர்ச்சைகளும் இல்லாமல், நாமினி அல்லது நாமினி மூலம் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நிதி அனுப்பப்படுவதை இது உறுதி செய்கிறது. டெபாசிட் செய்பவர் இறந்தால், வங்கி வகுத்துள்ள விதிகளின்படி நாமினி நிதியைப் பெறலாம். இது நாமினி மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகள் இருவருக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
வங்கிகளில் நாமினி முக்கியமாக கேட்கப்படுவது ஏன்?
நாமினி என்றால் என்ன? ஒரு வங்கியில் ஒரு நபர் பணம் டெபாசிட் செய்யும் போது, அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் நாமினிக்கு அது செல்லும். வங்கி, காப்பீடு அல்லது சொத்து போன்ற நிதி அமைப்பில் உள்ள சொத்துக்கள், நிதிகள் மற்றும் முதலீடுகளின் பயனாளி அல்லது பெறுநர் தான் நாமினி. ஒருவேளை நாமினி சட்டப்பூர்வ வாரிசாக இல்லாவிட்டால், அவருக்கு அதன் உரிமை கிடைக்காது. இதில், முக்கியமாக கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்த நபர் யாரையும் நாமினி செய்யவில்லை என்றால், சட்டப்பூர்வ வாரிசுகள் கணக்கின் நிதியைப் பெறுவதற்கான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.