Loading...
வாட்ஸ்அப் இல்லாதவர்களுக்கும் இன்விடேஷன் அனுப்பலாம்; தீபாவளி பரிசாக வந்த மாஸ் அப்டேட்
வாட்ஸ்அப் புதிய வசதி

வாட்ஸ்அப் இல்லாதவர்களுக்கும் இன்விடேஷன் அனுப்பலாம்; தீபாவளி பரிசாக வந்த மாஸ் அப்டேட்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
04:56 pm

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி பண்டிகைக் காலத்தை முன்னிட்டுத் தனது ஈவென்ட்ஸ் (Events) சேவையில் பல்வேறு புதிய வசதிகளைப் புகுத்தியுள்ளது. இதுவரை வாட்ஸ்அப் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த குழு நிகழ்வுகளின் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடிந்தது. ஆனால் தற்சமயம் அந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ள வாட்ஸ்அப், செயலியே பயன்படுத்தாத நபர்களுக்கும் இணைய இணைப்பு வழியாக அழைப்பிதழ்களை அனுப்பி பதிலைப் பெறும் வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

எளிய நடைமுறை

இன்டர்நெட் பிரவுசரில் மூலம் எளிதாகப் பதிலளிக்கும் RSVP நடைமுறைகள்

நிகழ்வை உருவாக்கும் வாட்ஸ்அப் பயனர், அதற்குரிய அட்டைப் படத்தை சேர்த்து இணைய இணைப்பை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ளலாம்.

அவ்வாறு பெறப்பட்ட லிங்கை வாட்ஸ்அப் இல்லாத நபர் தனது மொபைல் பிரவுசரில் திறந்து நிகழ்வின் விவரங்களைப் பார்வையிட முடியும்.

பின்னர் தங்களது பெயர் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் உள்ளீடு செய்து 'Going', 'Maybe', அல்லது 'Not Going' ஆகிய தேர்வுகளில் ஒன்றை எளிதாகத் தேர்வுசெய்து தங்களது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஈவென்ட்ஸ் ஹோம்

அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் 'ஈவென்ட்ஸ் ஹோம்' பிரிவு

பல்வேறு குழு உரையாடல்களில் சிதறிக் கிடக்கும் நிகழ்வு அழைப்புகளைத் தேடுவதில் உள்ள சிரமத்தைப் போக்க 'ஈவென்ட்ஸ் ஹோம்' (Events Home) என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று 'Events' என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் பழைய மற்றும் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளின் பட்டியலையும் ஒரே இடத்தில் காண முடியும்.

இந்த புதிய பிரிவின் மூலம் நிகழ்வை ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பதை மிக எளிதாகக் கண்காணித்து மேலாண்மை செய்ய முடியும்.

ADVERTISEMENT

விருந்தினர்கள் அனுமதி

கூடுதல் விருந்தினர்கள் அனுமதி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நினைவூட்டல்கள்

இந்த புதிய அப்டேட்டின் மூலம் நிகழ்வை ஏற்பாடு செய்பவர்கள் அழைக்கப்பட்ட நபருடன் கூடுதல் விருந்தினரை (+1 Plus-One) அழைத்து வர அனுமதிக்கும் வசதியை வழங்க முடியும்.

அத்துடன் நிகழ்வின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சிறப்பு ரிமைண்டர்களையும் அமைத்துக் கொள்ள முடியும்.

தீபாவளி பண்டிகைக் காலத்தில் கூட்டங்கள், குடும்ப விழாக்கள் மற்றும் நண்பர்களின் சந்திப்புகளைத் திட்டமிடுவதற்கு வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதிகள் அனைத்துப் பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT