Loading...
வாட்ஸ்அப் வெப்பில் இனி அது தெரியாது! பிரைவசியை மேம்படுத்த வாட்ஸ்அப்பின் புதிய Restricted Chat வசதி
பிரைவசியை மேம்படுத்த வாட்ஸ்அப்பின் புதிய Restricted Chat வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப்பில் இனி அது தெரியாது! பிரைவசியை மேம்படுத்த வாட்ஸ்அப்பின் புதிய Restricted Chat வசதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
05:55 pm

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளம், தனது பயனர்களின் தனிநபர் உரையாடல்களின் பாதுகாப்பையும் ரகசியத்தையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ரிஸ்ட்ரிக்டட் சாட் (Restricted Chat) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. முன்னதாக அட்வான்ஸ்டு சாட் பிரைவசி (Advanced Chat Privacy) என அழைக்கப்பட்ட இந்த அம்சம், தற்போது பெயர் மாற்றப்பட்டு ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta version 2.26.39.11) பயனர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

முதன்மை போன்

முதன்மை போனில் மட்டுமே இயங்கும்

இந்த புதிய வசதியின் மிகப்பெரிய சிறப்பம்சமே, Restricted Chat ஆன் செய்யப்பட்ட தனிநபர் உரையாடல்கள் பயனரின் முதன்மை ஸ்மார்ட்போனில் மட்டுமே செயல்படும் என்பதாகும்.

வாட்ஸ்அப் வெப் அல்லது மடிக்கணினிகள் போன்ற இணைக்கப்பட்ட பிற சாதனங்களில் இந்த உரையாடல்களைப் பார்க்கவோ, செய்திகளை அனுப்பவோ முடியாது.

இதன் மூலம், பயனர் இல்லாத நேரத்தில் வேறு யாராவது கணினி வழியே வாட்ஸ்அப் சாட்களை படிப்பதை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.

கட்டுப்பாடுகள்

சாட்டில் விதிக்கப்படும் 4 முக்கியக் கட்டுப்பாடுகள்

ஒரு குறிப்பிட்ட உரையாடலுக்கு Restricted Chat அம்சத்தை பயனர் மேனுவலாக ஆன் செய்யும் போது 4 முக்கியமான கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன:

மீடியா சேமிப்புத் தடை: அந்த சாட்டில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போனின் கேலரியில் தானாக சேமிக்கப்படாது.

சாட் எக்ஸ்போர்ட் தடை: உரையாடல்களை முழுமையாக Export Chat செய்ய முடியாது.

மெட்டா ஏஐ கட்டுப்பாடு: அந்த உரையாடலுக்குள் Meta AI அம்சங்களைப் பயன்படுத்த முடியாது.

இணைக்கப்பட்ட சாதனங்கள் துண்டிப்பு: வாட்ஸ்அப் வெப் உள்ளிட்ட Linked Devices-களில் இருந்து அந்த சாட் மறைக்கப்படும்.

ADVERTISEMENT

ஏஐ ஏஜென்ட்

மூன்றாம் தரப்பு கருவிகள் மற்றும் ஏஐ ஏஜென்ட்களுக்குக் கடிவாளம்

பல பயனர்கள் மற்றும் நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு சாஃப்ட்வேர்கள் மற்றும் ஏஐ ஏஜென்ட்களை வாட்ஸ்அப் கணக்குடன் இணைத்து உரையாடல்களைப் படித்து வருகின்றன.

Restricted Chat மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கான அணுகல் தடுக்கப்படுவதால், இதுபோன்ற ஏஐ ஏஜென்ட்களாலும் ரகசிய சாட்களை அணுக முடியாது.

தற்போது பீட்டா சோதனையில் உள்ள இந்த அம்சம், விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT