இப்போது ஆப்பிள் வாட்ச் வழியாக வாட்ஸப் வாய்ஸ் மெஸேஜ்களை நீங்கள் எளிதாக அனுப்பலாம்
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்சிற்கான துணை செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்வாட்ச்களில் இருந்து கால் நோட்டிபிகேஷன்களைப் பெறவும், முழு மெஸேஜ்களைப் படிக்கவும், வாய்ஸ் மெஸேஜ்களை நேரடியாக பதிவு செய்யவும்/அனுப்பவும் அனுமதிக்கும். "இந்த புதிய அனுபவம் உங்கள் ஐபோனை வெளியே எடுக்காமல் உங்கள் சாட்களை எளிதாக அணுக உதவும்" என்று வாட்ஸ்அப் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
பயனர் அனுபவம்
இந்த செயலி மெஸேஜ்களுக்கு எதிர்வினையாற்ற உங்களை அனுமதிக்கிறது
ஆப்பிள் வாட்ச் செயலி, செய்திகளுக்கு எதிர்வினையாற்றவும், உங்கள் சாட் ஹிஸ்டரியை ஒரே நேரத்தில் பார்க்கவும் உங்களை அனுமதிக்கிறது. படங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் சிறந்த தரத்தில் காட்டப்படும், ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யப்படும் அனைத்து தனிப்பட்ட மெஸேஜ்களும் அழைப்புகளும் எண்ட்-டு-எண்ட் encrypt செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன, இதனால் பயனர் தனியுரிமை பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்கிறது.
தொழில்நுட்ப தேவைகள்
இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அல்லது அதற்குப் பிந்தையவற்றுடன் வேலை செய்கிறது
ஆப்பிள் வாட்சிற்கான புதிய வாட்ஸ்அப் செயலி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களுடன் இணக்கமாக இருக்கும், அவை watchOS 10 அல்லது அதற்கு பிந்தைய பதிப்புகளில் இயங்கினால். எதிர்கால புதுப்பிப்புகளில் ஆப்பிள் வாட்ச் செயலியில் கூடுதல் அம்சங்களை கொண்டுவருவதாக Whatsapp நிறுவனம் உறுதியளித்துள்ளது. மொபைல் மற்றும் டெஸ்க்டாப் தளங்களுக்கு அப்பால் தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வாட்ஸ்அப்பின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.