
கூகிள் ஊழியர்களுக்கு இவ்வளவு சலுகைகளா? நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஐந்து சலுகைகள்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகிள் பலரின் கனவு நிறுவனாகும்.
டாப் தொழில்நுட்ப நிறுவனம், சம்பளம் என்பதையில் தாண்டி கூகிள் தனது ஊழியர்களுக்கான தரும் விலைமதிப்பில்லாத சலுகைகள் மற்றும் பணியிட நலன்களுக்காக பரவலாக அறியப்படுகிறது.
அவற்றுள் ஒரு சில சலுகைகள் பொதுவாக வெளியே அறியப்படாதவை, வேறு எந்த நிறுவனமும் தரதவறியவை. கூகிளின் ஒரு மென்பொருள் பொறியாளர் ஒருவரால் இந்த சலுகைகள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ரித்தி தத்தா என்ற பெங்களூரைச் சேர்ந்த கூகிள் ஊழியர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், பெரும்பாலானோர் கவனிக்காத ஐந்து முக்கியமான கூகிள் சலுகைகளை விளக்கியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சலுகைகள்
கூகிளின் 5 குறைத்து மதிப்பிடப்பட்ட சலுகைகள்
ஆன்சைட் ஸ்பா சேவைகள்: அலுவலகத்திலேயே மசாஜ் அமர்வுகள், ஊழியர்களுக்காக முன்பதிவு செய்யக்கூடிய ஸ்பா வசதிகள் வழங்கப்படுகிறது.
இடமாற்ற ஆதரவு: புதிய நகரத்திற்கு இடமாறும் ஊழியர்களுக்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தங்கும் வசதி, ஓட்டுநர் சேவை, வீடு தேடல், வாகன பரிமாற்றம் உள்ளிட்ட முழுமையான ஆதரவு.
சாதனத் தேர்வு சுதந்திரம்: ஊழியர்கள் தங்கள் பணி சாதனங்களாக மேக், பிக்சல், விண்டோஸ் அல்லது ஐபோன் தேர்வு செய்ய முடியும். இவற்றிற்கான துணை சாதனங்கள் in-house வெண்டிங் மெஷினில் கிடைக்கின்றன.
உடற்பயிற்சி கூடம்: நிறுவனத்துக்குள் நவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் ஆரோக்கிய உணவுப் பண்பாடுகள்.
வருடாந்திர சுகாதார பரிசோதனை: முழுமையான உடல் பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள் வரையிலான கவரேஜ் (உங்கள் கண்ணாடிகள் கூட உள்ளடக்கப்பட்டுள்ளன)