LOADING...
ஆண்ட்ராய்டை விட ஐபோனில் மோசடி மற்றும் ஸ்பேம் செய்திகள் 58% அதிகமாம்; கூகுள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆண்ட்ராய்டை விட ஐபோனில் மோசடி மற்றும் ஸ்பேம் செய்திகள் 58% அதிகமாம்

ஆண்ட்ராய்டை விட ஐபோனில் மோசடி மற்றும் ஸ்பேம் செய்திகள் 58% அதிகமாம்; கூகுள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2025
07:04 pm

செய்தி முன்னோட்டம்

விலை உயர்ந்த ஐபோன்கள் பாதுகாப்பானவை என்ற பொதுவான நம்பிக்கை தவறானது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் யூகோவ் (YouGov) இணைந்து நடத்திய இந்த ஆய்வு, ஐபோன்களைப் பயன்படுத்துபவர்களை விட ஆண்ட்ராய்டு பயனர்கள் மோசடி மற்றும் ஸ்பேம் குறுஞ்செய்திகளால் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் உட்படப் பல நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் 5,000 ஸ்மார்ட்போன் பயனர்கள் பங்கேற்றனர். ஆய்வின்படி, ஐபோன் பயனர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிக போலி இணைப்புகள் மற்றும் ஸ்பேம் செய்திகளைப் பெறுவதாகக் கூறியுள்ளனர். இதுவே அவர்களுக்கு ஆன்லைன் மோசடிக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு பயனர்கள்

ஆண்ட்ராய்டு பயனர்கள் பலர் தங்களுக்கு எந்த மோசடி குறுஞ்செய்தியும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், இரண்டு தளங்களின் இயல்புநிலைச் பாதுகாப்பு மற்றும் செய்தி வடிகட்டுதல் (message filtering) அமைப்புகளே என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஆன்டிராய்டு பயனர்கள் ஐபோன் பயனர்களை விட 96% குறைவாக ஸ்பேம் குறுஞ்செய்திகளைப் பெறுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வித்தியாசத்திற்குக் காரணம், மோசடிகளைத் தடுக்க ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏஐ அடிப்படையிலான அமைப்பு, ஒவ்வொரு மாதமும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுக்கிறது. ஒட்டுமொத்தமாக, கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களே தற்போது மிக அதிகப் பாதுகாப்பை வழங்குகின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது.