Loading...
ஸ்டார்லிங்க் vs ஜியோ: இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட்டை மலிவு விலையில் வழங்க முடியுமா?
ஸ்டார்லிங்க் vs ஜியோ

ஸ்டார்லிங்க் vs ஜியோ: இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட்டை மலிவு விலையில் வழங்க முடியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
11:05 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை மொபைல் டேட்டா ஆதிக்கத்திற்கு மத்தியில், தங்களது சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை மலிவு விலையில் வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார். ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் $107 பில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட ஐபிஓ வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக, எக்ஸ் தளத்தில் முகேஷ் அம்பானியின் சந்தை ஆதிக்கத்தை விமர்சித்துப் பதிவிட்ட மஸ்க், ஆரோக்கியமான போட்டி பொதுமக்களுக்கே பயனளிக்கும் எனத் தெரிவித்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஸ்டார்லிங்க் கட்டணம்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் கட்டணம் எவ்வளவு இருக்கும்?

ஸ்டார்லிங்க் சேவைகளுக்கான அதிகாரப்பூர்வக் கட்டணங்களை எலான் மஸ்க் இன்னும் அறிவிக்கவில்லை.

இருப்பினும், இதற்கான மாதக் கட்டணம் ரூ.3,000 முதல் ரூ.4,200 வரை இருக்கலாம் என்றும், உபகரணங்களை நிறுவத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வெறும் ரூ.350 செலவில் 60 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும் சூழலில், பொதுமக்கள் இவ்வளவு கூடுதல் தொகையைக் கொடுத்து சாட்டிலைட் இன்டர்நெட்டை வாங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டேட்டா தேவை

மொபைல் டேட்டாவும் வீட்டு பிராட்பேண்ட் தேவையும்

இந்தியாவில் மொபைல் இணையத்தின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், அதிவேக வீட்டு பிராட்பேண்ட் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

வழக்கமாக ஒரு பயனர் மாதத்திற்கு 30-40 ஜிபி மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் நிலையில், வீட்டு ஃபைபர் இணைப்புகள் 300 ஜிபி வரை பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் ஃபைபர் வசதி இல்லாத தொலைதூரப் பகுதிகளுக்கு ஸ்டார்லிங்க் சிறந்த மாற்றாக அமையக் கூடும். ஆனால், சாமானிய மக்கள் அதனை வாங்கும் அளவிற்கு விலையைக் குறைப்பதே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குப் பெரிய சவாலாகும்.

ADVERTISEMENT

ஜியோ

ஜியோவின் பதில் நடவடிக்கையும் எதிர்கால சந்தையும்

ஸ்டார்லிங்கிற்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் சொந்தமாக தாழ்வட்டப் பாதை (LEO) செயற்கைக்கோள் நெட்வொர்க்கை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கிராமப்புறங்கள் மற்றும் இணைய வசதியற்ற பகுதிகளுக்கு பிராட்பேண்ட் சேவையை விரிவாக்க இரு நிறுவனங்களும் போட்டியிடும்.

ஸ்டார்லிங்க் இந்திய சந்தையில் வெற்றி பெற வேண்டுமானால், வெறும் தொலைதூரப் பகுதிகளை மட்டும் நம்பியிருக்காமல், அனைவருக்கும் எட்டக்கூடிய நியாயமான சந்தாத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது மிக அவசியமாகும்.

ADVERTISEMENT