
ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதிகள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வில் புதிய வசதிகள் பலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள், என்னென்ன வசதிகள்?
ஏர்டிராப்பைப் போல தொடர்புகளை பரிமாறிக் கொள்ள "நேம்டிராப்" என்ற புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது ஆப்பிள். இதன் ஐபோன் மற்றும் வாட்ச்களில் கூட பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்.
ஜர்னல் என்ற புதிய ஜர்னலிங் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது புகைப்படங்கள், நடவடிக்கைகள், இருப்பிடம் மற்றும் இசையை வைத்து தனிப்பட்ட பரிந்துறைகளை இந்த செயலி செய்யுமாம்.
ஆப்பிள்
ஆப்பிளின் புதிய வசதிகள்:
ஆட்டோகரெக்ட் அம்சத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
இனி 'ஹே சிரி' எனக் சொல்லத் தேவையில்லை, 'சிரி' எனக் கூறினாலே போதுமாம்.
தங்களது ஆப்பிள் மெஸெஜஸ் சேவையிலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
தங்களது ஏர்பாடுகளின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் புதிய அப்டேட்களைக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ட்ரான்பன்ஸி மோடுகளின் கலவையாக அடாப்டிவ் ஆடியோ வசதியைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள் டிவி மூலம் ஃபேஸ்டைம் செய்யும் வசதியையும் இந்த நிகழ்வின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசதிக்கு ஐபோன் அல்லது ஐபேடின் கேமராவையே வெப்கேம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.