LOADING...
விண்வெளி வீரர்களுக்கு ஜாக்பாட்: நிலவுக்கு ஐபோன் கொண்டு செல்ல நாசா அனுமதி
விண்வெளி வீரர்கள் நவீன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

விண்வெளி வீரர்களுக்கு ஜாக்பாட்: நிலவுக்கு ஐபோன் கொண்டு செல்ல நாசா அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
08:18 am

செய்தி முன்னோட்டம்

நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளார். இதன்படி, வரவிருக்கும் 'க்ரூ-12' (Crew-12) மற்றும் 'ஆர்ட்டெமிஸ் II' (Artemis II) விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்கள் ஐபோன் மற்றும் நவீன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி, நவீன தொழில்நுட்பத்தை விண்வெளிக்கு கொண்டு செல்வதன் மூலம், நிலவு பயணத்தின் வரலாற்று தருணங்களை மிக துல்லியமாக படம்பிடிக்க இந்த முடிவு வழிவகை செய்யும். ஆர்ட்டெமிஸ் II நிலவு பயணத்தில் ஈடுபடும் வீரர்கள் நவீன ஸ்மார்ட்போன்களை கொண்டு செல்ல நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளார்.

பழைய விதி

பழைய விதிகளுக்கு முற்றுப்புள்ளி

நீண்ட காலமாக விண்வெளி பயணங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களுக்கு நாசா மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்திருந்தது. கதிர்வீச்சு தாக்கம், பேட்டரி வெப்ப பரிசோதனை மற்றும் அதிர்வு சோதனைகள் எனப் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே ஒரு சாதனம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். இதன் காரணமாக, 2026-லும் விண்வெளி வீரர்கள் 2016-ம் ஆண்டு மாடல் நிக்கான் டிஎஸ்எல்ஆர் (Nikon DSLR) மற்றும் பத்து ஆண்டுகள் பழமையான கோப்ரோ (GoPro) கேமராக்களையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது இந்த "தேவையற்ற தாமதங்கள்" தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம்

வேகமான செயல்பாடும், நவீன தொழில்நுட்பமும்

இந்த முடிவை விளக்கிய ஐசக்மேன், "வன்பொருள் அனுமதிகளுக்காக (Hardware approvals) பல ஆண்டுகள் காத்திருக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும். விண்வெளியிலும் நிலவிலும் உயர்தர ஆய்வுகளை மேற்கொள்ள இந்த நவீன தொழில்நுட்ப தேவை இன்றியமையாதது," என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நவீன ஸ்மார்ட்போன்களில் உள்ள மேம்பட்ட கேமரா வசதிகள் மற்றும் சென்சார்களை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும்.

Advertisement

ஆர்ட்டெமிஸ் II

முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ட்டெமிஸ் II

ஆர்ட்டெமிஸ் II மிஷன் என்பது மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்து செல்லும் நாசாவின் கனவுத் திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இந்த வரலாற்று பயணத்தில் அதிநவீன போன்கள் பயன்படுத்தப்படுவது, பூமியில் இருக்கும் சாமானிய மக்களும் நிலவின் காட்சிகளை மிக தெளிவான தரத்தில் காண உதவும். இந்த நடைமுறை மாற்றம் நாசாவின் விண்வெளி ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement