Page Loader
கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு?
கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு?

கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு?

எழுதியவர் Prasanna Venkatesh
May 22, 2023
10:45 am

செய்தி முன்னோட்டம்

இந்திய தொழில் போட்டிய ஆணையமனாது கூகுள் நிறுவனத்தின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி 275 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது. ஆண்ட்ராய்டு இயங்குதள சந்தையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அந்நிறுவனத்தின் செயலியில் வழங்கப்படும் கட்டண முறையைப் பயன்படுத்த அழுத்தம் கொடுத்தது ஆகிய இரு காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "கூகுளின் இந்த நடவடிக்கைகள் மிகவும் தீவரமானது மற்றும் கவலை தரக்கூடியது. இது இந்தியாவின் மொத்த டிஜிட்டல் கட்டமைப்பையும் பாதிக்கும்" எனத் தெரிவித்திருக்கும் அவர், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அரசும் கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கூகுள்

கூகுள் மீது புதிய குற்றச்சாட்டு: 

கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட மேற்கூறிய குற்றச்சாட்டுகள் இருக்க, தற்போது அந்நிறுவனத்தின் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்திருக்கின்றனர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். கூகுளின் செயலியில் வழங்கப்படும் கட்டண முறையைப் பயன்படுத்த புதிய சேவைக் கட்டணம் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த முடிவு இந்திய தொழில் போட்டி ஆணையத்தின் முடிவை மீறுவதாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்த புதிய சேவைக் கட்டணம் குறித்த விளக்கத்தையும் முன்வைத்திருக்கிறது கூகுள். இந்திய தொழில் போட்டிய ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு இந்தியாவில் அதன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை கூகுள் கொண்டு வரவேண்டியிருந்தது. மேலும், "வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு தங்களிடம் மாற்றங்களை மேற்கொள்ள உத்தரவிடவில்லை", எனவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.