Loading...
கூகுள் ஜெமினி AI-யில் புதிய 'Agentic' அம்சம் அறிமுகம்: தானாகவே பணிகளைச் செய்யும் தொழிலநுட்பம்
'Agentic' எனும் புதிய அதிநவீன அம்சத்தை கூகுள் கிளவுட் மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது Google

கூகுள் ஜெமினி AI-யில் புதிய 'Agentic' அம்சம் அறிமுகம்: தானாகவே பணிகளைச் செய்யும் தொழிலநுட்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் தனது பிரத்யேக ஜெமினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் 'Agentic' எனும் புதிய அதிநவீன அம்சத்தை கூகுள் கிளவுட் மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய தொழில்நுட்பம் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் நின்றுவிடாமல், அவர்களுக்கு பதிலாக பல்வேறு பணிகளைத் தானாகவே திட்டமிட்டு நிறைவேற்றும் வல்லமை கொண்டது. பாரம்பரிய உரையாடல் சார்ந்த ஏஐ கருவிகள் தகவல்களை மட்டுமே வழங்கி வந்த நிலையில், இந்த 'ஏஜென்டிக்' அம்சம் Coding உருவாக்குவது, மீட்டிங்குகளைத் திட்டமிடுவது மற்றும் பயண முன்பதிவுகளைச் செய்வது எனப் பல்வேறு பணிகளைப் பயனர்களின் சார்பாக தன்னிச்சையாகச் செய்து முடிக்கும்.

பாதுகாப்பு

நிறுவனங்களுக்கு முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இம்மாநாட்டில் பேசுகையில், "ஜெமினி ஏஐ தளத்தை மாதம் 100 கோடிக்கும் அதிகமான தீவிரப் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் கூகுள் ஜெமினி என்டர்பிரைஸ் சேவையைப் பயன்படுத்துகின்றன" என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் அளவீட்டுத் திறனை உறுதிசெய்யும் பொருட்டு, இப்புதிய ஏஜென்டிக் அம்சம் முதற்கட்டமாக வர்த்தக நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் கூறுகையில், "இந்த ஏஜென்ட்களுக்கு வெறும் கட்டளைகளை மட்டும் வழங்கத் தேவையில்லை; இலக்குகளை நிர்ணயித்தாலே போதும். அவை தாங்களாகவே திட்டமிட்டு, பிரத்யேகக் கருவிகளைப் பயன்படுத்தி இலக்குகளை எட்டிவிடும்" என்றார்.

ஏஜென்டிக் ஏஐ

அலுவலக சக ஊழியரைப் போலச் செயல்படும் கூகுள் ஜெமினி

இந்த ஏஜென்டிக் ஏஐ கருவி நிறுவனங்களின் உள்நாட்டுக் கணினி அமைப்புகளுடன் பாதுகாப்பாக இணைக்கப்படும்.

இது கூகுள் வொர்க்ஸ்பேஸ் கணக்கைக் கொண்டு, ஒரு சக ஊழியரைப் போல எந்த அணியில் யார் இருக்கிறார்கள், அவர்களின் டைம் சோன், காலண்டர் அட்டவணை மற்றும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகள் யார் என்பதை உணர்ந்து செயல்படும்.

இச்சேவை விண்டோஸ், மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ஸ்லாக் மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 உள்ளிட்ட பல தளங்களில் வர்த்தகப் பயன்பாட்டிற்கு கிடைக்கவுள்ளது.

ADVERTISEMENT