ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே
நாடெங்கும், ஜனவரி 1 முதல், சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. வங்கி லாக்கர் ஒப்பந்தம் முதல் CNG-LPG கேஸ் விலையேற்றம் வரை பல மாற்றங்கள், இன்று முதல் அமலாக்கப்படும். அவற்றின் பட்டியல் இதோ: NPS பகுதியளவு திரும்பப் பெறுதல்: மத்திய அரசு ஊழியர்கள் NPS (தேசிய ஓய்வூதிய முறை)க்கான தங்கள் திரும்பப்பெறல் கோரிக்கைகளையும், பகுதியளவு திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்ககளையும், அவர்களுக்கு தொடர்புடைய நோடல் அலுவலகங்கள் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். பகுதி பணம் திரும்பப் பெறுவதற்கான காரணத்தை வலுவூட்ட, அதற்குரிய துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி லாக்கர்கள்: திருத்தப்பட்ட வங்கி லாக்கர் விதிகளின் கீழ், புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
புதிய விதிகள்
உயர் பாதுகாப்பு ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட்: ஏப்ரல் 1, 2019க்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட் (HSRP) பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் Rs.5,000 முதல் Rs.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டுகள்: பணம் செலுத்துவதற்கு மாற்றாக கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ரிவார்டு பாயிண்ட் திட்டத்தை, ஜனவரி 1ஆம் தேதி முதல், பல வங்கிகள் மாற்ற வாய்ப்புள்ளது. கார் விலை: பல கார் உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை: இன்று முதல், வணிக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களின் விலை 25 ரூபாய் உயர்த்தப்படும். இருப்பினும், தனிநபர் எல்பிஜி விலையில் எந்த மாற்றமும் இருக்காது.