
சூரிய கிரகணம் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? அறிவியல்பூர்வ உண்மைகள்
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) அன்று நடைபெற உள்ளது. இது சர்வ பித்ரு அமாவாசை நாளில் நிகழ்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் நவராத்திரி பண்டிகையும் தொடங்க உள்ளது. இந்த சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு சுமார் 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும். இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். எனினும், இந்த நேரத்தில் இந்தியாவில் இரவு நேரம் என்பதால், இந்த கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. சூரிய கிரகணம் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. குறிப்பாக, இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
பாதிப்பு
சூரிய கிரகணத்தால் என்ன பாதிப்பு ஏற்படலாம்?
ஆனால், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு காரணங்கள் அல்லது சில மருந்துகள் போன்றவற்றால்தான் பிறப்புக் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரிய கிரகணத்தின்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது கண்கள். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கிரகணத்தின்போது வெளியில் இருப்பவர்கள் நேரடியாக சூரியனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே செல்வதால், சூரிய ஒளி நேரடியாக கருவில் உள்ள குழந்தையின் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இது நம்பிக்கைகளின் அடிப்படையிலான தகவல் மட்டுமே, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.