Page Loader
பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்!
பேஸ்புக் மெசஞ்சரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்

பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Jan 25, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மெசஞ்சரில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் பாதுகாப்பு அம்சத்தை உலக அளவில் வழங்கப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற முன்னணி சமூக வலைத்தளங்கள் அன்றாடம் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக பல அப்டேட்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் என்க்ரிப்ட் பாதுகாப்பு அம்சம். இந்த பாதுகாப்பு அம்சம் இனி வரும் மாதங்களில் உலக முழுவதும் பயன்படுத்தும் மில்லியன கணக்கான மக்களுக்கு வழங்கப்படும். இதில், புகைப்படங்கள், இமோஜிகள், அரட்டை தீம்கள் என பல அம்சத்தை கொண்ட மெசஞ்சர்களுக்கு வழங்க உள்ளது. E2EE அரட்டைகள் தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட Messenger பயனர்களுக்கு வழங்கப்படும்

ஃபேஸ்புக் மெசஞ்சர்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வந்த மெட்டா நிறுவனம்

என்னதான் சாட் செய்யும் போது தனியுரிமை முக்கியமானதாகிவிட்டாலும், அதை விட எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மிக முக்கியமானதாக ஒன்றாகவும், இதனால் பாதுகாப்பு நம்பகத்தன்மையுடன் செயல்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், E2EE அரட்டைகளின் போது தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை நீங்கள் விரும்பினால், தீம் மாற்றவும். நிலையான வண்ணங்கள் முதல் கிரேடியன்ட் தீம்கள் வரை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு நாளும் Messenger இல் அனுப்பப்படும் பில்லியன் கணக்கான செய்திகளுக்கு பாதுகாப்பான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட சேவையை உருவாக்க, கவனமாகச் சோதனை செய்ய வேண்டும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது.