LOADING...
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த க்ரோக் ஏஐ

சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
03:00 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது, அதிவேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, க்ரோக் ஏஐ ஆனது, சம்பவம் தொடர்பாக அளித்த பதில்களில், உண்மைச் சம்பவத்திற்கு முரணான தகவல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைப் பற்றிய தவறான அடையாளத் தகவலைப் பயன்படுத்தியது அல்லது சம்பவத்தின் காரணம் குறித்துச் சரிபார்க்கப்படாத வதந்திகளை உண்மையென்றுக் கூறியது. அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களைப் புறக்கணித்துவிட்டு, சமூக ஊடகங்களில் பரவியத் தவறானப் பதிவுகளையே அதுப் பயன்படுத்தியது.

நம்பகத்தன்மை

எலான் மஸ்க் மற்றும் ஏஐயின் நம்பகத்தன்மை

எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் க்ரோக் ஏஐயை வெளியிட்டபோது, அது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்கை நுண்ணறிவு பொறிமுறைகளை விடச் சற்றுக் கிளர்ச்சியூட்டும் பதில்களைத் தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இதன் மூலம் மற்ற ஏஐ அமைப்புகளால் தவிர்க்கப்படும் உணர்வுப்பூர்வமான அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களில் கூடக் க்ரோக் பதிலளிக்கும் என்று அவர் கூறியிருந்தார். இருப்பினும், இந்தச் சிட்னி சம்பவத்தில் க்ரோக் ஏஐயின் அசல் நோக்கம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு முக்கியமானச் செய்தியைப் பற்றிச் செய்திகளைக் கொடுக்க வேண்டிய நேரத்தில், அது தவறான தகவலைப் பரப்பியுள்ளது. க்ரோக் ஏஐ அமைப்பை உருவாக்கிய எக்ஸ் ஏஐ நிறுவனம், இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை.

Advertisement