போட்டோஸ், வீடியோஸ் எதுவுமே டெலீட் பண்ண வேணாம்! போன் ஸ்டோரேஜ் பிராப்ளத்துக்கு எளிய தீர்வு; இதோ ட்ரிக்ஸ்
செய்தி முன்னோட்டம்
இன்றைய ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை 'Storage Full' நோட்டிபிகேஷன் தான். முக்கியமான நேரத்தில் இந்த எச்சரிக்கை வந்தால், எதை டெலீட் செய்வது என்று தெரியாமல் பலரும் குழம்பிப்போவார்கள். ஆனால், உங்களுக்குப் பிடித்தமான நினைவுகளான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதையுமே அழிக்காமல், உங்களது ஸ்மார்ட்போனில் கணிசமான ஸ்பேஸை (Space) உருவாக்க முடியும். அதற்குப் பின்பற்ற வேண்டிய சில எளிய டெக் ட்ரிக்ஸ்களை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
கிளியர் கேச்
ஆப்களின் கேச் (App Cache) டேட்டாவை கிளியர் செய்யுங்கள்
நாம் தினமும் பயன்படுத்தும் கூகுள் குரோம், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற ஆப்கள், தற்காலிகப் பயன்பாட்டிற்காக 'Cache Data' என்ற பெயரில் ஜிபி கணக்கில் இடத்தை அடைத்துக் கொள்ளும்.
போன் செட்டிங்ஸ் (Settings) சென்று Apps > See all apps பகுதிக்கு செல்ல வேண்டும்.
அங்கு அதிக அளவில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும் ஆப்களைத் தேர்ந்தெடுத்து Clear Cache என்பதைக் கொடுக்க வேண்டும்.
இதனால் உங்கள் முக்கியத் தரவுகள் எதுவும் அழியாமல் பல ஜிபி ஸ்பேஸ் உடனடியாகக் கிடைக்கும்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் ஸ்டோரேஜ் மேனேஜர் (WhatsApp Storage Manager) மாயாஜாலம்
நமது போன் ஸ்டோரேஜ் நிரம்புவதற்கு வாட்ஸ்அப் மூலம் வரும் வீடியோக்களும் ஜிஃப் (GIF) பைல்களுமே முக்கியக் காரணமாகும்.
வாட்ஸ்அப்பில் Settings > Storage and Data > Manage Storage பகுதிக்குச் செல்லவும்.
அங்கு 5MB-க்கும் அதிகமான அளவுள்ள பெரிய பைல்கள் தனியாகப் பட்டியலிடப்படும்.
அவற்றில் தேவையில்லாத வீடியோக்கள் மற்றும் ஃபார்வர்டு செய்யப்பட்ட தேவையற்ற மெசேஜ்களை மட்டும் தேர்வு செய்து அழிப்பதன் மூலம் போன் ஸ்டோரேஜை பெருமளவில் மிச்சப்படுத்தலாம்.
க்ளவுட் பயன்பாடு
கூகுள் போட்டோஸ் பேக்கப் மற்றும் டெலிகிராம் க்ளவுட் பயன்பாடு
உங்கள் போனில் உள்ள புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆப்பில் 'High Quality' அமைப்பில் பேக்கப் செய்யலாம்.
பேக்கப் முடிந்ததும் Free up space என்ற விருப்பத்தைப் பயன்படுத்தினால், பேக்கப் செய்யப்பட்ட புகைப்படங்கள் போன் நினைவகத்திலிருந்து மட்டும் நீக்கப்பட்டு கூகுள் கணக்கில் பத்திரமாக இருக்கும்.
மேலும், டெலிகிராம் ஆப்பில் உள்ள 'Saved Messages' வசதியைப் பயன்படுத்தி முக்கியமான ஆவணங்களை அப்லோட் செய்து வைத்துவிட்டு, போனில் உள்ள ஒரிஜினல் பைல்களை நீக்கி ஸ்பேஸை அதிகரிக்கலாம்.