LOADING...
தாவரங்களுக்கும் உணர்வு இருக்கிறதா? ஐஐடி ஆய்வில் வெளியான வியப்பூட்டும் அறிவியல் உண்மை!
தாவரங்களுக்கும் உணர்வு இருப்பதாக ஐஐடி ஆய்வில் தகவல்

தாவரங்களுக்கும் உணர்வு இருக்கிறதா? ஐஐடி ஆய்வில் வெளியான வியப்பூட்டும் அறிவியல் உண்மை!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2026
07:42 pm

செய்தி முன்னோட்டம்

தாவரங்களுக்கும் மனிதர்களைப் போல சுற்றுப்புறத்தை உணரும் தனித்துவமான உணர்வு நிலை இருக்கிறதா என்ற கேள்விக்கு, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டி கல்வி நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி தற்பொழுது மிக முக்கியமான ஒரு பதிலை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துள்ளது. தாவரங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் போது, அவற்றின் செல்கள் ஏனோதானோ என்று அழியாமல், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தற்காலிகமாக செயலிழந்து, பின்னர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றன என்பதை விஞ்ஞானிகள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

தாவர செல்கள்

தாவர செல்கள் எவ்வாறு 'சுவிட்ச் ஆஃப்' ஆகின்றன?

ஐஐடி மண்டி இயக்குநர் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா மற்றும் பேராசிரியர் சயன் காந்தி நந்தி ஆகியோர் தலைமையிலான குழு, தக்காளி மற்றும் கத்தரி செடிகளை அதிநவீன நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தது. மனிதர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் போது உணர்வு நிலை மாறுவதைப் போல, மூளையே இல்லாத தாவரங்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவர்கள் சோதித்தனர். அப்போது தாவர செல்லின் ஆற்றல் மையமான மைட்டோகாண்ட்ரியா முதலில் செயலிழந்தது. அதனைத் தொடர்ந்து ஒளிச்சேர்க்கை மற்றும் கழிவு மேலாண்மை உறுப்புகள் செயலிழந்து, இறுதியாக டிஎன்ஏ அடங்கிய உட்கரு செயலிழந்தது வியப்பை ஏற்படுத்தியது.

கூட்டுச் செயல்பாடு

மூளை இல்லாமலேயே நடக்கும் கூட்டுச் செயல்பாடு

மயக்க மருந்தின் தாக்கம் குறைந்தவுடன், இந்தச் செல்கள் அனைத்தும் அப்படியே தலைகீழ் வரிசையில் (உட்கருவில் தொடங்கி மைட்டோகாண்ட்ரியா வரை) மீண்டும் செயல்படத் தொடங்கின. இந்த ஆய்வின் மிக முக்கிய ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாகத் தாவர செல்லுக்குள் ரேண்டமாக சிதறிக் கிடக்கும் உட்கருக்கள் அனைத்தும், மயக்க மருந்து கொடுத்தவுடன் ஒரே நேரத்தில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வரிசையில் மாறின. தாவரங்களுக்கு விலங்குகளைப் போன்ற நரம்பு மண்டலமோ அல்லது நியூரான்களோ இல்லாத போதும், ஆயிரக்கணக்கான உட்கருக்கள் எவ்வாறு ஒரே நேரத்தில் இந்த முடிவை எடுக்கின்றன என்பது விஞ்ஞானிகளை உறைய வைத்துள்ளது.

Advertisement

தாவரங்களுக்கு உயிர்?

இது தாவரங்களுக்கு உயிர் இருப்பதை உறுதி செய்கிறதா?

இந்த ஆய்வு, தாவரங்கள் மனிதர்களைப் போலவே சிந்திக்கின்றன அல்லது வால்கின்றன என்று நேரடியாகக் கூறவில்லை. மாறாக, மூளையே இல்லாத உயிரினங்களிலும் மயக்க மருந்து ஒரு குறிப்பிட்ட செல்லுலார் வடிவத்தை உருவாக்குகிறது என்பதை இது உணர்த்துகிறது. அட்வான்ஸ்டு பயாலஜி கெமிக்கல் & பயோமெடிக்கல் இமேஜிங் ஆகிய சர்வதேச அறிவியல் இதழ்களில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்பொழுது தி ஹிடன் லைஃப் ஆஃப் ட்ரீஸ் போன்ற புத்தகங்கள் மூலம் தாவரங்களின் உணர்வுகள் குறித்த விவாதங்கள் உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஐஐடி ஆய்வு அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

Advertisement