2025-இல் இந்தியாவை ஆக்கிரமித்த டாப் 5 சுற்றுலாத் தலங்கள்
செய்தி முன்னோட்டம்
2025-ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் டாப் 5 இடங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால், தனித்துவமான மற்றும் அமைதியான இடங்களுக்கு பயணம் செய்யும் கலாச்சாரம் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வழக்கமான இடங்களைத் தவிர்த்து, அமைதி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அந்தப் பட்டியல் இதோ:
#1
காஷ்மீர்: மீண்டும் ஒரு சொர்க்கம்
பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் காஷ்மீர், இந்த ஆண்டும் தனது மகுடத்தை தக்கவைத்துள்ளது. குறிப்பாக சோனாமார்க், அரு பள்ளத்தாக்கு, டிராஸ் மற்றும் குரேஸ் பள்ளத்தாக்கு போன்ற இடங்கள் ரீல்ஸ்களில் வைரலாகி, இளைஞர்களை பெருமளவில் கவர்ந்தன. பஹல்காம் தாக்குதலுக்கு முன் அதிகளவுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்த்தது காஷ்மீர். அதன் பின்னரும் ஒற்றுமையை பறைசாற்ற இளைஞர்கள் பலர் இங்கே விசிட் செய்ய தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
#2
ராஜஸ்தான்: கிராமிய கலைகளின் சங்கமம்
ராஜஸ்தானின் ராயல் அரண்மனைகளைத் தாண்டி, இந்த ஆண்டு பயணிகள் அதன் கிராமப்புற வாழ்வியலை நோக்கி திரும்பினர். ராஜஸ்தானின் மண் மணம் மாறாத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உணவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
#3
ரிஷிகேஷ்: அமைதி தேடி பயணம்
ஆன்மீகம் மற்றும் யோகாவின் தலைநகரான ரிஷிகேஷ், பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கும் இளைஞர்களின் புகலிடமாக மாறியுள்ளது. கங்கை நதிக்கரையில் அமைதி தேடும் பயணங்கள் இந்த ஆண்டு பெரும் ட்ரெண்டானது.
#4
மேகாலயா: வடகிழக்கின் வசீகரம்
இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாக மேகாலயா உருவெடுத்துள்ளது. அதன் பசுமையான காடுகள் மற்றும் மேகங்கள் தவழும் மலைப்பகுதிகள் 2025-ஆம் ஆண்டில் இளைஞர்களின் 'Bucket List'-இல் முதலிடம் பிடித்தன.
#5
புதுச்சேரி: தென்னிந்தியாவின் பெருமை
தென்னிந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தலம் நமது புதுச்சேரி. பிரஞ்சு கலாச்சாரம், கடற்கரைகள் மற்றும் மதகடிப்பட்டு சந்தை போன்ற உள்ளூர் இடங்கள் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் டாப் சாய்ஸாக இருந்துள்ளது.