குளிர்காலத்தில் வாஷிங் மெஷின் பராமரிப்பில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
செய்தி முன்னோட்டம்
இந்தியக் குடும்பங்களில் அத்தியாவசியமான மின்சாதனங்களில் ஒன்றாக வாஷிங் மெஷின் உள்ளது. பெரும்பாலான வீடுகளில் இடப்பற்றாக்குறையால் வாஷிங் மெஷினைச் சுவருக்கு மிகவும் அருகில் வைப்பது ஒரு பொதுவான தவறாகும். மெஷினைச் சுவரை ஒட்டி வைப்பதால் அதன் ஆயுட்காலம் குறைகிறது, மேலும் அடிக்கடி பழுது ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாஷிங் மெஷின் செயல்பாட்டில் இருக்கும் போது ஏற்படும் அதிர்வுகளைச் (Vibration) சமாளிக்கவும், குழாய்கள் சேதமடைவதைத் தவிர்க்கவும், மெஷின் சுவரிலிருந்து குறைந்தது 4 முதல் 6 அங்குலங்கள் இடைவெளி விட்டு வைக்கப்பட வேண்டும். இந்த இடைவெளி இல்லாவிட்டால், அதிக வேகத்தில் துணி உலர்த்தப்படும்போது டிரம்மில் ஏற்படும் அதிர்வுகள் சுவரைத் தாக்கும். இது சத்தம் மற்றும் பாகங்களின் தேய்மானம் ஆகியவற்றை அதிகப்படுத்தும்.
பராமரிப்பு
ஆயுளை அதிகரிக்கும் பராமரிப்பு குறிப்புகள்
மேலும், வளைந்த நீர் குழாய்கள் நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதால், கசிவு அல்லது மோட்டார் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான இடைவெளி சரியான காற்றோட்டத்தை உறுதிசெய்து, மெஷின் அதிக வெப்பமடைவதைத் தவிர்க்கிறது. மெஷின் எப்போதும் சமமான மற்றும் உறுதியான தரையில் அமைக்கப்பட வேண்டும். சமமற்ற தரை அதிர்வுகளை அதிகரிக்கும். இடப்பற்றாக்குறை இருந்தால், அதிர்வலைகளைத் தடுக்கும் மெத்தைகள் (Anti-vibration pads) அல்லது உறுதியான ஸ்டாண்டுகளைப் பயன்படுத்தலாம்.
குளிர்காலம்
குளிர்கால பராமரிப்பு
குளிர்கால பராமரிப்பைப் பொறுத்தவரை, வழக்கமாக குளிர்காலத்தில் குழாய்களில் நீரின் அடர்த்தி அதிகமாவதால் மோட்டாரின் சுமை அதிகரிக்கும். எனவே, உங்கள் மெஷினில் வசதியிருந்தால், வாரத்திற்கு ஒருமுறை ஒரு சிறிய சூடான நீர் சுழற்சியை (warm-water cycle) இயக்கலாம். மேலும், துணிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றாமல், மெஷின் உலர்ந்த நிலையில் இருக்க கதவை லேசாகத் திறந்து வைப்பது நல்லது. சரியான இடம் மற்றும் வழக்கமான பராமரிப்பு மெஷினின் ஆயுளை நீட்டிக்க உதவும்.