Loading...
மூட்டுவலி அறுவை சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்! ஆனால் ஹெல்த் இன்சூரன்ஸ் முழுசா கிடைக்காதா? பின்னணி இதோ
மூட்டுவலி அறுவை சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவது தொடர்பான காப்பீட்டு திட்டங்கள்

மூட்டுவலி அறுவை சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்! ஆனால் ஹெல்த் இன்சூரன்ஸ் முழுசா கிடைக்காதா? பின்னணி இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
04:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மூட்டுவலி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. ஆரம்பகட்டத்தில் மருந்துகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டாலும், காலப்போக்கில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக அமைகிறது. நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்தபோதிலும், பெரும்பாலான நோயாளிகளால் அதை எளிதில் பெற முடிவதில்லை.

முக்கியத்துவம்

ரோபோடிக் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம்

இந்தியாவில் சுமார் 6 கோடி மக்கள் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சை பெறுகின்றனர்.

ரோபோடிக் கரங்களின் உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மனிதத் தவறுகளைக் குறைத்து அதிகத் துல்லியத்தை வழங்குகிறது.

இதன் மூலம் நோயாளிகள் விரைவாகக் குணமடைந்து, குறைந்த நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப முடிகிறது.

மேலும், இது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக உயர்த்துகிறது.

முரண்பாடு

காப்பீட்டுத் தொகையில் நீடிக்கும் முரண்பாடு

இந்தியாவின் 1 மற்றும் 2 ஆம் நிலை நகரங்களில் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உள்கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன.

இருப்பினும், மருத்துவக் காப்பீடு முழுமையாகக் கிடைக்காததே நோயாளிகளுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.

வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கும் நிறுவனங்கள், ரோபோடிக் முறையைப் பயன்படுத்தும்போது பகுதியளவு தொகையை மட்டுமே வழங்குகின்றன அல்லது முற்றிலும் நிராகரிக்கின்றன.

இந்நிலையை மாற்றி முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

எதிர்காலத் தேவை

நீண்டகால நிதிப் பலனும் எதிர்காலத் தேவையும்

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐ 2019-லேயே நவீன சிகிச்சைகளை காப்பீட்டில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால் அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

ரோபோடிக் சிகிச்சையால் பக்கவிளைவுகளும், மறு-அறுவை சிகிச்சை தேவைகளும் குறைகின்றன.

இதனால் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நீண்டகால அடிப்படையில் நிதி இழப்பு குறையும்.

எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறை இணைந்து செயல்படுவதன் மூலமே ஏழை, எளிய நோயாளிகளுக்கு இந்த அதிநவீன சிகிச்சை சென்றடையும்.

ADVERTISEMENT