கண்களைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் ரகசியங்கள்: இந்த எளிய பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!
செய்தி முன்னோட்டம்
இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் மற்றும் லேப்டாப் திரைகளை அதிக நேரம் பார்ப்பது நமது கண்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினம் (World Health Day) அனுசரிக்கப்படுவதையொட்டி, கண் மருத்துவ நிபுணர்கள் பார்வைத் திறனை மேம்படுத்தவும், கண் நோய்களைத் தவிர்க்கவும் சில எளிய வாழ்வியல் மாற்றங்களைப் பரிந்துரைக்கின்றனர். புனே என்ஐஓ (NIO) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மௌனிகா பொலிசெட்டி, கண்ணாடியோ அல்லது அறுவை சிகிச்சையோ தீர்வாகாது, முறையான தினசரி பழக்கவழக்கங்களே நீண்ட காலக் கண் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்கிறார்.
சத்தான உணவு
பார்வையின் முதல் படி
கண் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவிலேயே தொடங்குகிறது. கண்களுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை இலை காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் செல்களைப் பாதுகாக்கின்றன. பழங்கள் மற்றும் கொட்டைகள், வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த ஆரஞ்சு, பாதாம் போன்றவை கண்புரை (Cataract) அபாயத்தைக் குறைக்கின்றன. சர்க்கரை கட்டுப்பாடு முறையான உணவுப் பழக்கம் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், 'டயாபெடிக் ரெட்டினோபதி' போன்ற தீவிர பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
உடற்பயிற்சி
கண்களுக்கு ரத்த ஓட்டம்
உடற்பயிற்சி இதயத்திற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அவசியம். வழக்கமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கி, கண்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்வதை உறுதி செய்கிறது. இது கண்களில் அழுத்தம் அதிகரிப்பதைத் (Glaucoma) தடுக்க உதவுகிறது. தொடர்ந்து திரைகளைப் பார்ப்பதால் கண் எரிச்சல், வறட்சி மற்றும் மங்கலான பார்வை ஏற்படலாம்.இதைத் தவிர்க்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிமுறை:
டிஜிட்டல் திரைகளிடமிருந்து பாதுகாப்பு
20-20-20 விதி
தொடர்ந்து திரைகளைப் பார்ப்பதால் கண் எரிச்சல், வறட்சி மற்றும் மங்கலான பார்வை ஏற்படலாம். இதைத் தவிர்க்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிமுறை. 20-20-20 விதி ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை, 20 விநாடிகள் உற்றுப் பார்க்க வேண்டும். திரையின் பிரகாசம் (Brightness) மற்றும் தூரத்தை வசதிக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.
அமைதியான முறையில் தாக்கும் நோய்கள்
முறையான கண் பரிசோதனை
குளுக்கோமா (Glaucoma) மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஆரம்பக் கட்டத்தில் எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. எனவே, பார்வை நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், ஆண்டுக்கு ஒருமுறை தகுதி வாய்ந்த கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம். முன்கூட்டியே கண்டறிவது நிரந்தரப் பார்விழப்பைத் தடுக்க உதவும். உங்கள் உடலைப் பேணுங்கள், உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்" என்பதே இந்த உலகச் சுகாதார தினத்தில் மருத்துவர்கள் வழங்கும் எளிய செய்தியாகும். சிறு மாற்றங்கள் பெரிய நன்மைகளைத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சிறிய மாற்றங்கள்... பெரிய பலன்கள்
தூக்கம் மற்றும் பாதுகாப்பு
பெரிய மெனக்கெடலின்றி உங்கள் கண்களைப் பாதுகாக்க இதோ சில எளிய குறிப்புகள்: நீர்ச்சத்து போதிய அளவு தண்ணீர் குடிப்பது கண்களின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். தூக்கம் கண்கள் ஓய்வெடுக்க 7-8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். வெயிலில் செல்லும்போது தரமான சூரியக் கண்ணாடிகளை (Sunglasses) அணியுங்கள்.