LOADING...
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த  சுற்றுலா இடங்கள்
சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா இடங்கள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த  சுற்றுலா இடங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2025
02:48 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க ஏற்ற இடங்களை தேடுபவர்களுக்காக, காற்றின் தரக் குறியீடு (AQI) 50-க்கும் குறைவாக உள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியல் இங்கே. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த திருநெல்வேலி, குன்னூர் உள்ளிட்ட இடங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பு: AQI 0 முதல் 50 வரை இருந்தால், அது "நல்ல காற்று" (Good Air Quality) என வகைப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள இடங்கள்

திருநெல்வேலி: AQI ≈ 33 ("நன்று" வகை) என பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் இருப்பதாலும், கடலோரம் & சிறிய கலங்கல் காரணமாக வாயு நன்றாக உள்ளது. தஞ்சாவூர்: AQI ≈ 42 என்று பதிவாங்கியுள்ளது. விவசாயம் நிறைந்த பகுதி, காற்று மாசுபாடு வாய்ப்பு குறைவு. வரலாற்று தொன்மை நிறைந்த இந்த நகரம் சிறந்த சுற்றுலா தளம். குன்னூர்: ஊட்டியை விட குறைவான கூட்டம் கொண்ட குன்னூர், புத்துணர்ச்சியூட்டும் மலைக் காற்று மற்றும் முடிவற்ற பசுமையை கொண்ட ஒரு சிறிய மலைவாசஸ்தலமாகும். அதன் AQI அளவுகள் ஆண்டின் பெரும்பகுதிக்கு 50 க்கும் குறைவாகவே இருக்கும்.

மற்ற மாநிலங்கள்

கர்நாடகா, கேரளா மற்றும் அருணாச்சல பிரதேசத்திலும் தூய காற்றை சுவாசிக்கலாம் 

திருச்சூர்: AQI ≈ 48 ("நன்று" பகுதி) எனப் பதிவாக உள்ளது. கடலோரம் & பசுமை நிறைந்த சூழல் வாயு சுத்தமானதாக இருக்க உதவுகிறது. சுற்றுச்சுழல் காற்று, மழை போன்ற இயற்கை காரணிகள் வாயு தூய்மையை மேம்படுத்தும். மடிகேரி: AQI ≈ 42 எனக் கணிக்கப்பட்டுள்ளது. மலையகப்பகுதியில் இருப்பதால் வாயு சிறிது சிறந்தது. காடுகள், காபி தோட்டங்கள் சுற்றுலா பயணத்திற்கு சிறந்தவை. அய்ஸ்வால்: மிசோரமில் அமைந்துள்ள இந்த இடம், AQI ≈ 32 என பதிவாகியுள்ளது. அதாவது மிகவும் சுத்தமான காற்று. வடகிழக்கு இந்தியாவில் உள்ள இயற்கை சூழல் சிறந்த பகுதி இந்த Aizwal. உயரமான மலைப்பகுதிகள் காரணாமாக மாசு குறைவாக இருக்கின்றன.