
வாழ்க்கையில் செல்வம் பொங்க, தமிழ் புத்தாண்டன்று தவிர்க்க வேண்டிய செயல்கள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
சித்திரை மாதத்தின் முதல் நாளான தமிழ் புத்தாண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும்.
இந்த நாள் புதிய தொடக்கங்களையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் மங்களநாளாகக் கருதப்படுகிறது.
ஆகையால் இந்த நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சிந்தனையுடன், நேரத்தையும் நம்பிக்கையையும் மதித்தே செய்யப்பட வேண்டும்.
புத்தாண்டன்று நாம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது, பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்ற செயல்கள் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நாளில் செய்யும் நல்ல செயல்கள் முழு ஆண்டும் நம் வாழ்வில் நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனினும் இந்த நாளில் தவிர்க்க வேண்டியவை சில உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
தவிர்க்க வேண்டியவை
புத்தாண்டு அன்று தவிர்க்க வேண்டிய செயல்கள்
அசைவ உணவுகள்-இந்த புனித நாளில் அசைவம் உண்பது தவிர்க்கப்பட வேண்டும்.
நகம் வெட்டுதல், முகசவரம், முடி வெட்டுதல்-இவை எல்லாம் புத்தாண்டன்று செய்யக்கூடாதவை.
எண்ணெய் தேய்த்து தலைக்குள் குளித்தல்-இந்து மரபில் முக்கிய நாட்களில் எண்ணெய் தேய்த்தல் தவிர்க்கப்படுகிறது.
வீட்டில் உள்ள ஒட்டடைகளை அகற்றுதல்-அந்த நாளில் வீட்டு ஒட்டடைகளை அகற்றக்கூடாது.
குப்பை வெளியே கொட்டுதல்-வீட்டில் சேகரித்து வைத்துள்ள கழிவுகளை வெளியே போடக் கூடாது.
வீட்டிலுள்ள பொருட்களை பிறருக்கு கொடுப்பது-அந்த நாளில் யாருக்கும் எந்த பொருளும் (பழையவையாக இருந்தாலும் கூட) கொடுக்கக் கூடாது.
கடன் கொடுத்தல் மற்றும் வாங்குதல் -புத்தாண்டன்று யாரிடமும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.
இந்நாளில் தவிர்க்க வேண்டியவைகளை பின்பற்றி, நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபட்டு, தமிழ் புத்தாண்டை நல்வாழ்வோடும் ஆனந்தத்துடனும் கொண்டாடுவோம்.