
உங்கள் கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? கவனம் தேவை!
செய்தி முன்னோட்டம்
காலநிலை மாற்றம் மற்றும் தொற்று கிருமிகள் காரணமாக கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக வெளியில் சென்று, வீடு திரும்பும்போது காற்றில் கலந்த தூசிகள், புகை மற்றும் அழுக்குகள் போன்றவை கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்குகின்றன.
அப்படி கண்களில் அரிப்பு தோன்றும் போது தன்னிச்சையாக நாம் அவசரமாக தேய்த்து விடுகிறோம்.
ஆனால் கைகளை சுத்தம் செய்யாமல் கண்களை தேய்ப்பதால் கண்களின் தொற்று அதிகரிக்கக்கூடும்.
இந்த செயலால் கண்கள் சிவக்கவும், வீக்கம் அடையவும் வாய்ப்புள்ளது.
இந்த தற்காலிக தொந்தரவுகளுக்கு இயற்கை முறைகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
நிவாரணம்
இயற்கை முறைகளை பயன்படுத்தி நிவாரணம்
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கண்களில் வைக்க, வறண்ட கண்கள் குளிர்ச்சியடைந்து, அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கும்.
ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரை தண்ணீரில் கலந்து, துணியில் நனைத்து கண்களை துடைத்தால், அரிப்பு குணமாகும்.
பால்: பாலை துணியில் நனைத்து, இமைகள் மீது துடைத்து வந்தால், கண்களில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
வெந்நீர் மற்றும் உப்பு: வெந்நீரில் உப்பு கலந்து, பஞ்சு துணியில் நனைத்து கண்களை துடைத்தால் அரிப்பு நிற்கும்.
தயிர்: தயிரை கண்களில் பூசி, சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் துணி நனைத்து துடைத்தால் அரிப்பு குணமாகும்.
சீரகம்: சீரகத்தை தண்ணீரில் கலந்து, தினமும் இரு முறை கண்களை கழுவினால், எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கும்.