NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் 4 நிபந்தனைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் 4 நிபந்தனைகள் 

    இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் 4 நிபந்தனைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைந்து 15 நாட்கள் வரை தங்கலாம் என்று ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

    நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிப்ரவரி 4 முதல் இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழையலாம் என்று ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான விசா இல்லாத திட்டத்தை ஈரான் அங்கீகரித்தது.

    சாதாரண கடவுச்சீட்டை வைத்திருக்கும் நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் அவர்கள் தங்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரான்

    சுற்றுலா பயணிகள் மட்டுமே விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய முடியும் 

    "15 நாட்கள் கால அவகாசத்தை அதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் எல்லைக்குள் சுற்றுலா நோக்கங்களுக்காக நுழையும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா ரத்து பொருந்தும்." என்றும் ஈரான் கூறியுள்ளது.

    நீண்ட காலம் தங்க விரும்பும் இந்தியர்கள், ஆறு மாத காலத்திற்குள் பல நுழைவுகளைச் செய்ய விரும்பும் இந்தியர்கள் மற்றும் பிற வகையான விசாக்கள் தேவைப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகங்களிலிருந்து தேவையான விசாவைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "இந்த விசா இல்லாத சலுகைகள் வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு பொருந்தும்" என்று ஈரான் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலா
    ஈரான்

    சமீபத்திய

    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்

    சுற்றுலா

    சாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள் பயண குறிப்புகள்
    இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்  சுற்றுலாத்துறை
    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு  சென்னை

    ஈரான்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025