LOADING...
சதைக்குள் நகம் வளர்ந்து வலிக்கிறதா? இன்க்ரோன் நெய்ல் வரக் காரணங்களும் அதைத் தடுக்கும் வழிகளும்!
சதைக்குள் நகம் புதையும் 'இன்க்ரோன் நெய்ல்' பாதிப்பிற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

சதைக்குள் நகம் வளர்ந்து வலிக்கிறதா? இன்க்ரோன் நெய்ல் வரக் காரணங்களும் அதைத் தடுக்கும் வழிகளும்!

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2026
07:51 pm

செய்தி முன்னோட்டம்

நகம் உள்ளுக்குள் வளர்வதை 'இன்க்ரோன் நெய்ல்' (Ingrown Nail) என்று சொல்வார்கள். இது ஒரு சாதாரண பிரச்சனைதான். யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலும் கால் கட்டைவிரலில் தான் வரும், ஆனாலும் கையில் உள்ள நகங்களிலும் இது வர வாய்ப்பு உண்டு. இன்றைய கட்டுரையில், இந்த 'இன்க்ரோன் நெய்ல்' என்றால் என்ன, இது ஏன் வருகிறது, இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று விரிவாகப் பார்ப்போம்.

#1

இன்க்ரோன் நெய்ல் என்றால் என்ன?

இன்க்ரோன் நெய்ல் என்பது, நகத்தின் ஓரங்கள் தோல் பகுதிக்குள் அழுந்தி வளரும் ஒரு நிலை. இதனால் வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படலாம். இது பெரும்பாலும் கால் கட்டை விரல்களில் தான் வரும். அதேபோல் கை நகங்களிலும் இது வரக்கூடும். இன்க்ரோன் நெய்ல் பொதுவாக நகங்களை சரியாக வெட்டாதது, இறுக்கமான காலணிகள் அணிவது அல்லது காயம் ஏற்படுவது போன்ற காரணங்களால் வரும். இந்த நிலை மிகவும் சங்கடமாக இருக்கும். சில நேரங்களில் கிருமித் தொற்றையும் கூட ஏற்படுத்தலாம்.

#2

இன்க்ரோன் நெய்ல் வருவதற்கான காரணங்கள்

நகங்களை தவறாக வெட்டுவதுதான் இன்க்ரோன் நெய்ல் வருவதற்கு மிக முக்கியமான காரணம். நீங்கள் நகங்களை மிகவும் குட்டையாகவோ அல்லது தவறான வடிவத்திலோ வெட்டினால், அவை தோலுக்குள் வளர ஆரம்பித்துவிடும். இறுக்கமான காலணிகள் அணிவதும் ஒரு காரணம். ஏனெனில் அது நகங்கள் மீது அதிக அழுத்தத்தை உண்டாக்கும். காயம் படுவது அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தாலும் இன்க்ரோன் நெய்ல் வரலாம். இந்தக் காரணங்களை மனதில் வைத்துக்கொண்டால், இந்த பிரச்சனையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

Advertisement

#3

இன்க்ரோன் நெய்ல்-லின் அறிகுறிகள்

இன்க்ரோன் நெய்ல் ஏற்பட்டால், உங்கள் கால் அல்லது கை கட்டை விரலில் வலி, வீக்கம் மற்றும் சிவந்து போகுதல் போன்றவற்றை உணரலாம். அதைத் தவிர, அந்த இடத்தில் அரிப்பு அல்லது எரிச்சல் கூட இருக்கலாம். சில சமயங்களில், கிருமித் தொற்றால் சீழ் கூட பிடிக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. அப்போதுதான் சரியான சிகிச்சை பெற்று, பிரச்சனை பெரிதாகாமல் தடுக்க முடியும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் குணமாகிவிடலாம்.

Advertisement

#4

இன்க்ரோன் நெய்ல் வருவதைத் தடுப்பது எப்படி?

இன்க்ரோன் நெய்ல் வராமல் தடுக்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். நகங்களை சீராகவும், கூர்மையான முனை இல்லாமலும் சரியாக வெட்டி, ஃபைல் செய்து கொள்ளுங்கள். இறுக்கமான காலணிகளைத் தவிர்த்து, உங்கள் காலுக்கு ஏற்ற வசதியான காலணிகளை அணியுங்கள். காயம் ஏற்பட்டால், உடனே அதை சுத்தம் செய்து, கிருமித் தொற்றைத் தடுக்கும் க்ரீம் போடுங்கள். மேலும், பாதங்களை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருங்கள். நகங்களை தொடர்ந்து நன்றாகப் பராமரித்து வாருங்கள்.

#5

இன்க்ரோன் நெய்ல்-லுக்கான சிகிச்சை

இன்க்ரோன் நெய்ல் வந்துவிட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். கிருமித் தொற்றைத் தடுக்கும் மாத்திரைகள் அல்லது தேவைப்பட்டால் சிறிய சர்ஜரி கூட செய்யப்படலாம். வீட்டிலேயே சில எளிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, சூடான தண்ணீரில் உப்பு கலந்து பாதங்களை ஊற வைக்கலாம். அத்துடன், கிருமித் தொற்றைத் தடுக்கும் க்ரீம் பயன்படுத்தலாம். இந்த அனைத்து தகவல்களையும் மனதில் வைத்துக்கொண்டால், இன்க்ரோன் நெய்ல் பிரச்சனையில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளலாம்.

Advertisement