
நான்கு பொதுவான தைராய்டு பிரச்சனைகள்!
செய்தி முன்னோட்டம்
உலக தைராய்டு தினம்: தைராய்டு என்பது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் உள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். உங்கள் உடல் ஆற்றலைப் பயன்படுத்தும் விதத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உருவாக்குகிறது தைராய்டு சுரப்பி.
ஹைப்பர் தைராய்டிசம்: இது அதிக அளவு ஹார்மோனை உற்பத்தி செய்வதால், உடல் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு வழிவகுக்கும். இதன் அறிகுறிகள், ஓய்வின்மை, நரம்புத் தளர்ச்சி, எரிச்சல், அதிகரித்த வியர்வை, பசியின்மை, தசை பலவீனம் ஆகும்.
ஹைப்போ தைராய்டிசம்: உங்கள் தைராய்டு சுரப்பி கிட்டத்தட்ட செயலற்றதாகி, ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. இதன் அறிகுறிகள் நாள்பட்ட உடல் சோர்வு, தோல் & முடி வறட்சி, மலச்சிக்கல், எடை அதிகரிப்பு, மனச்சோர்வு ஆகும்.
Thyroid
தைராய்டு பிரச்சனைகளின் அறிகுறிகள்
கோயிட்டர்: கோயிட்டர் என்பது உங்கள் தைராய்டு சுரப்பியின் விரிவாக்கத்தின் விளைவாக ஏற்படும் கழுத்து வீக்கமாகும். இது உலகம் முழுவதும் குறைந்தது 15.8 சதவீத மக்களை பாதிக்கிறது. பருமனானவர்கள், இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு கோயிட்டர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தைராய்டு முடிச்சுகள்: இவை உங்கள் தைராய்டு சுரப்பியில் உருவாகும் சிறிய வளர்ச்சிகள், பெரும்பாலும் அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. பெரும்பாலான முடிச்சுகள் தீங்கற்றவை என்பதால், அவை எந்த முக்கிய அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, ஆனால் அவை பெரிதாக வளர்ந்தால், அவை உங்கள் கழுத்தில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். தைராய்டு முடிச்சுகளின் சில அறிகுறிகள் நரம்புத் தளர்ச்சி, பசியின்மை, எடை இழப்பு காரணமாகும்.