Loading...
மிலாது நபி 2026: முஹம்மது நபியின் பிறந்தநாள் வரலாறு மற்றும் சிறப்பு; முழு பின்னணி 
முஹம்மது நபியின் பிறந்தநாள் வரலாறு

மிலாது நபி 2026: முஹம்மது நபியின் பிறந்தநாள் வரலாறு மற்றும் சிறப்பு; முழு பின்னணி 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2026
07:26 am

செய்தி முன்னோட்டம்

இஸ்லாமிய மார்க்கத்தைத் தோற்றுவித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் புனிதமான திருநாளே மிலாது நபி (Eid Milad-un-Nabi) அல்லது மிலாத்-இ-நபி என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12வது நாளில் இந்நாள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பிறை தென்படும் கணக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு இன்று (ஆகஸ்ட் 26) அன்று மிலாது நபி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆன்மீக முக்கியத்துவம்

நபிகள் நாயகத்தின் வாழ்வும் ஆன்மீக முக்கியத்துவமும்

நபிகள் நாயகம் கிபி 570 ஆம் ஆண்டு ரபி உல் அவ்வல் மாதத்தில் மக்கா நகரில் அவதரித்தார்.

இறைவனின் இறுதித் தூதராகப் போற்றப்படும் அவரது போதனைகள், ஹதீஸ்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அன்பையும், சுயநலமின்மையையும், மன்னிக்கும் உயரிய குணத்தையும் கற்றுத் தந்தன.

மனித குலத்திற்கு நல்வழி காட்டிய வழிகாட்டியாகத் திகழ்ந்த அவர், தனது 63வது பிறந்தநாளிலேயே இயற்கை எய்தினார்.

எனவே, இந்நாள் அவரது பிறப்பையும், அவர் விட்டுச் சென்ற உன்னதமான போதனைகளையும் நினைவுகூரும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

வரலாறு

மிலாது நபி திருநாளின் வரலாற்றுப் பின்னணி

மிலாது நபியைக் கொண்டாடும் வழக்கம் இஸ்லாமின் தொடக்கக் காலங்களிலிருந்தே இருந்து வருகிறது.

தொடக்க காலத்தில் நபிகள் நாயகத்தைப் போற்றிப் பாடல்களைப் பாடுவதும், கவிதைகளைக் கூறுவதுமாகவே இந்நாள் அனுசரிக்கப்பட்டது.

பின்னர் எகிப்தில் ஃபத்மித் கலிபாவின் ஆட்சிக் காலத்தில் இந்நாள் முறையான பொது விழாவாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றது.

ADVERTISEMENT

கொண்டாட்டம்

கொண்டாட்ட முறைகள் மற்றும் சமுதாய நற்பணிகள்

மிலாது நபி திருநாளை முன்னிட்டு மசூதிகள், தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வண்ணமயமான விளக்குகளால் பேரழகாக அலங்கரிக்கப்படும்.

இந்நாளில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவருடைய போதனைகள் மற்றும் மனிதநேயப் பண்புகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கவிதை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

மேலும், ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பது, தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவது மற்றும் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என சமுதாய மறுமலர்ச்சிப் பணிகளுடன் முஸ்லிம்கள் இந்நாளை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

ADVERTISEMENT